சுற்றி வளைக்கப்பட்ட ரத்தீஸ்…. தமிழகம் அழைத்து வர முடிவு… அடுத்த கைது உதயநிதி தான்…

0
Follow on Google News

சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் கடந்த ஆட்சியில் பார்ட்டி பான்ட் என்கிற பெயரில் முக ஸ்டாலின் , உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஊழல் பணம் சென்றதாகவும் இதில் உதயநிதி நண்பர் ரத்தீஷ் பெயரும் உள்ளதாகவும் பேசி இருந்தார், இந்நிலையில் தற்பொழுது தலைமறைவாகி இருக்கும் ரத்தீஷ் யார்.? அவர் பிண்ணனி என்ன என்பது குறித்து பலரும் தேட ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் அமலாக்க துறை டாஸ்மாக் தொடர்பான இடங்களில் நடத்திய சோதனையில் சுமார் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவுப்பு வெளியிட்டது. இப்படி தமிழகத்தையே உலுக்கிய டாஸ்மாக் ஊழல் விவகாரம் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

அடுத்தடுத்து அமலாக்க துறை விசாரணையை தீவிரப்படுத்தி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பர்களான ஆகாஷ் பாஸ்கர், ரதீஸ், விக்ரம் ஜூ ஜூ ஆகியோரை நெருங்கியது, அமலாக்க துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இந்த மூவரும் தலைமறைவானார். இதில் வெளிநாடு தப்பி சென்ற ரத்தீஷ் டாஸ்மாக் ஊழலில் சிக்கிய மிக முக்கிய புள்ளியாக பார்க்கப்பட்டு யார் இந்த ரதீஸ் என்கிற விவாதம் அனல் பறந்தது.

கடந்த திமுக ஆட்சியில் சுமார் 300 கோடி அளவில் மாதம் பாட்டிலுக்கு எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் வாங்குவதின் மூலமாகவே முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்க துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மாதம் டாஸ்மாக் மூலம் 50 சதவீத லாபம் அரசாங்க கணக்கில் வரவில்லை என்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காகவே பல AC பார்களும் மனமகிழ் மன்றம் என்கின்ற பெயரில் மதுபான பார் களும் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மனமகிழ் மன்றம் போன்ற பார்களில் சுமார் 80 சதவீதம் பாட்டில்கள் அரசாங்க கணக்கில் வராதவை என்று அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே டாஸ்மாக் மூலம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கின்ற நிலையில்,

சுமார் 3000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்பதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த 3000 கோடி ரூபாய் பணத்தை எப்படி.? யார் மூலம் மணி லண்டரிங் நடந்துள்ளது என்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தோண்டி எடுத்து வருகிறார்கள்,

இதற்கு மூளையாக செயல்பட்டது உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரத்தீஷ் டாஸ்மாக்கின் உயர் அதிகாரி விசாகனுடன் நடந்த சாட் வெளியாகி இருந்தது. அதே நேரத்தில் விசாகன் மட்டுமல்லாமல் பல அதிகாரிகளிடம் ரத்தீஸ் தான் நேரடியாக தொடர்பில் இருப்பதாகவும். மேலும் திமுக ஆட்சியில் டாஸ்மாக் தொடர்பான வியாபார கணக்கு ரிப்போர்ட் அனைத்துமே ரத்தீசின் மேற்பார்வையிலே நடந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் பல ஆயிரம் கோடி ஊழல் பணம் ரத்தீஸ் மூலமாகவே மணி லண்டரிங் நடந்து முதல் குடும்பத்திற்கு சென்றதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் குரலாகவே அதிகாரிகளிடம் ரத்தீஷ் பேசி வந்ததும், மேலும் வெளிநாடுகளில் ரத்தீஷ் மூலம் ஊழல் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், ரத்தீஷை பிடித்து விட்டால் முதல் குடும்பத்தை தட்டி தூக்கி விடலாம் என்பது தான் முதல்வர் விஜய்யின் கணக்கு என கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது ரத்தீஷ் க்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இருக்கும் தகவல் தமிழக உளவு துறைக்கு தெரியவந்துள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்து தமிழகம் வரவழைத்து, அவர் மூலம் உதயநிதியை கைது செய்யும் நடவடிக்கைகள் மிக தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here