நடைபெற்று கொண்டிருக்கும் சட்டசபை கூட்ட தொடர் முடிந்ததும், தமிழக்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்ல இருக்கும் முதல்வர் விஜய், தன்னுடைய வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியதும், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர இருக்கிறார், அதற்கான அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டே வெளிநாடு பயணத்தை மேற்கொள்கிறார் முதல்வர் விஜய்.
தற்பொழுது தமிழக அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களின் செங்கோட்டையன் தவிர்த்து மற்றவர்கள் அனைவருமே புதியவர்கள், அந்த வகையில் அனுபவத்தின் அடிப்படையில் யாருக்கும் அமைச்சரவையில் முதல்வர் விஜய் இடம் கொடுக்கவில்லை, இருந்தாலும் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்கிறார்களா.? என முதல்வர் விஜய் கொடுத்த வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார்கள் நான்கு அமைச்சர்கள்.

அதில் முதல் இடத்தில் இருப்பது சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, அமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலே தன்னுடைய பெயர் பிளெக்ஸ் பலகையில் முதலில் ஏன் போடவில்லை என மேடையிலே நிகழ்ச்சி ஏற்பட்டர்களிடம் கோபத்தை காட்டி அமைச்சர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி சச்சையில் சிக்கினார் ஜெகதீஸ்வரி.
அடுத்து, ஒருவரை தொலைபேசியில் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியானது, இதில் உக்கட்டமாக தன்னை ஒரு பட்டதாரி என்று கொண்டிக்கொண்ட ஜெகதீஸ்வரியின் சட்டசபை உரையின் போது அவர் பேசிய தமிழ், இவர் உண்மையிலே பட்டதாரி தானா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது, அந்த வகையில் அமைச்சரவை மாற்றத்தில் தன்னுடைய அமைச்சர் பதவியை பறிகொடுப்பதில் முதல் இடத்தில் இருக்கிறார் ஜெகதீஸ்வரி.
அதற்கு அடுத்ததாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பெயரும் முதல்வரின் அமைச்சரவை மாற்றத்தில் பறிபோகும் அமைச்சர்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றுளளதாகவும், ஆனால் புஸ்ஸி ஆனந்த் மூலம் தன்னுடைய அமைச்சர் பதவியை தக்க வைக்க கடுமையான முயற்சியை ரஞ்சித்குமார் செய்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது, அதே போன்று கைத்தறி அமைச்சர் விஜய் பாலாஜியின் பெயரும் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பவுடர் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கில்லி சரத் பெயர் இடம் பெற்று இருக்கும் தகவலும் வெளியாகி உள்ளது, கில்லி சரத் சர்ச்சையில் சிக்கிய போதே அவருடைய பதவி பறிக்கப்பட்டால், திமுகவின் மிரட்டலுக்கு பயந்து கில்லி சரத் அமைச்சர் பதிவை பறித்தது போன்று ஆகி விடும் என்பதால் தான், கில்லி சரத் அமைச்சர் பதவியை உடனே பறிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் பவுடர் சர்ச்சையில் சிக்கிய கில்லி சரத் அமைச்சர் பதவி தற்பொழுது அமைச்சரவை மாற்றத்தின் போது பறிபோக இருக்கிறது என்றும், முதல்வர் விஜய் கையில் இருக்கும் பட்டியலில் அமைச்சர் கில்லி சரத் பெயரும் இடம் பெற்று இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அதே போன்று பல அமைச்சர்களின் இலாக்கா மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், புதியதாக மாற்றம் செய்ய பட இருக்கும் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான முயற்சிகளில் பல ரசிகர்மன்ற காலத்தில் இருந்து தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணத்திற்கு பின்பு அமைச்சரவையில் அதிரடி மாற்றத்தில் உறுதியாக முதல்வர் விஜய் இருப்பதாகவும் கோட்டை வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல் உறுதி படுத்துகிறது.

