2538 பணியிடங்கள்… 35 லட்சம் லட்சம்… கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை கைப்பற்றிய ஆவணம்…

0
Follow on Google News

தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களில் மிகப்பெரிய அளவில் லஞ்சப் பணம் பெறப்பட்டதாக கடந்த திமுக ஆட்சியில் 2025 அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.இது தொடர்பாக தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை எழுதியுள்ள கடிதத்தில்,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மொத்தம் 2 ஆயிரத்து 538 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான நியமனங்களில், ஒவ்வொரு பதவிக்கும் 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பணம் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், சில செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் இணைந்து தேர்வு செயல்முறையில் முறைகேடு செய்ததாகவும், இதன் மூலம் குறைந்தது 150 தேர்வர்களுக்கு கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறைகேடு தொடர்பான தகவல்கள் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்திய சோதனையின் அடிப்படையில் கைப்பற்றி இருக்கிறது அமலாக்க துறை, அப்போதைய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்தபோது,

இந்த பணி நியமன முறைகேடு தொடர்பான தகவல்கள் தெரியவந்ததாக தமிழக டி.ஜி.பி.க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணி நியமனத்தில் மிகப்பெரிய அளவில் லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறும் நிலையில், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை ஏன் நேரடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை?

அமலாக்கத்துறைக்கு வழக்குப்பதிவு செய்யும் அதிகாரம் இல்லையா? என்கிற கேள்விக்கு இதற்கான காரணம் அமலாக்கத்துறையின் அதிகார வரம்புடன் தொடர்புடையது. லஞ்சம் பெறுதல், அரசு பணிகளில் முறைகேடு செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதற்கட்ட குற்றவியல் வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்துவது மாநில காவல்துறையின் கீழ் வரும் அதிகாரமாகும்.

அதனால்தான், தங்களிடம் கிடைத்துள்ளதாக கூறப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால் இந்த கடிதத்தின் அடிப்படையில் கடந்த திமுக ஆட்சியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தற்பொழுது தவெக அரசு இந்த கடிதத்தின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2 ஆயிரத்து 538 பணியிடங்களுக்கான தேர்வு, 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு, குறைந்தது 150 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாக கூறப்படும் தகவல், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கிடைத்ததாக கூறப்படும் ஆதாரங்கள் அடிப்படையில் நடத்தி வரும் தமிழக லஞ்சஒழிப்பு சோதனை முடிவில் கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here