கைதாகும் கே என் நேரு… 1,020,00 கோடி மெகா ஊழல்… லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய ஆதாரம்…

0
Follow on Google News

கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு வகித்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.1,020 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனேவே அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ஒப்பந்ததாரர்களிடமிருந்து குறிப்பிட்ட சதவீதத்தில் கமிஷன் வசூலிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி இருந்தது.

குறிப்பாக, டெண்டரின் மொத்த மதிப்பில் சுமார் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் தொகை பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்கான டெண்டர்களில் முறைகேடு நடைபெற்றதாகவும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர் நடைமுறைகள் கையாளப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தனது சோதனையில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கமிஷன் தொகை நேரடியாக அமைச்சர் கே.என். நேருவிடம் வழங்கப்படாமல், அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாகவே குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், அதற்கு பதிலாக ஒப்பந்த மதிப்பின் குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக வசூலிக்கப்பட்டதாகவும் விசாரணை அமைப்பு தெரிவித்தது.

இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைகளின்போது கிடைத்ததாகக் கூறப்படும் ஆவணங்கள், டிஜிட்டல் தகவல்கள், பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் மற்றும் ஒப்பந்த ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மொத்தம் சுமார் ரூ.1,020 கோடி மதிப்பிலான டெண்டர் பணிகளில் இந்த முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை கணக்கிட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை அப்போதைய திமுக ஆட்சி காலத்திலே வலியுறுத்தி இருந்தது. குறிப்பாக, டெண்டர் வழங்கப்பட்ட விதம், ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்ட நடைமுறை, அவர்களிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் கமிஷன் தொகை, அந்த பணம் யாரிடம் சென்றது, பணப்பரிவர்த்தனையில் யார் யார் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

இதன் அடிப்படையில் தற்பொழுது கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி இருக்கிறது. இந்த அதிரடி சோதனையில் ரூ.1,020 கோடி மதிப்பிலான டெண்டர் பணிகளில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் பெறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு, இந்த விவகாரத்தின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

இதனால், அமலாக்கத்துறை கூறியுள்ள ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு மற்றும் 7.5 முதல் 10 சதவீதம் கமிஷன் ககுறித்து தற்பொழுது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை நடத்தியுள்ள சோதனையின் முடிவில் கே என் நேரு மீது எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்ட வாய்ப்புள்ளது, அப்படி எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டால், அமலாக்க துறை கே என் நேருவை விசாணைக்கு அழைத்து கைது செய்ய கூட வாய்ப்புள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here