விஜய் கையில் வாட்ஸ் ஆதாரம்… பாய்ந்தது அதிரடி வழக்கு… சுற்றி வளைக்கப்பட்ட கே என் நேரு…

0
Follow on Google News

தமிழக முதல்வர் விஜய் திங்கள்கிழமை சட்டசபையில் பேச போகிறார் என்றதுமே, தமிழகம் முழுவதுமே ஒரே பரபரப்பு, என்ன பேச போகிறார், குறிப்பாக திமுக குறித்த எந்த ஆதாரத்தை வெளியிட போகிறார் என்கிற பரபரப்பு நீடித்து வந்த நிலையில், முதல்வர் விஜய் சட்டசபையில் பேசி முடித்த அடுத்த நிமிடமே, திமுக முன்னாள் அமைச்சருக்கு இடியை இறக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இது திமுகவுக்கு இடியை இறக்கும் செய்தியாக இருந்தாலும் கூட தவெகவுக்கு மற்றும் முதல்வர் விஜய்யை ஆதரிப்பவர்களுக்கு இனிப்பான செய்தி என்றே சொல்லலாம், கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளைகள் துறையின் அமைச்சராக இருந்த கே என் நேரு, அவருடைய காலத்தில் விடப்பட்ட டெண்டரில் பார்ட்டி பண்ட் என்கிற பெயரில் பெறப்பட்ட கமிஷன் 7.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் என்றும்,

இதன் மூலம் சுமார் 1020 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என கடந்த திமுக ஆட்சி காலத்தில் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் நடந்த அமலாக்க சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் , தமிழக கவல்த்துறைக்கு அமலாக்க துறை கடிதம் அனுப்பி முன்னாள் அமைச்சர் கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி இருந்தது ஆனால், இது தொடர்பாக கடந்த திமுக அரசு எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால் தற்பொழுது முதல்வர் விஜய், திங்கள்கிழமை சட்டசபையில் பேசுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே 1020 கோடி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் தவெக அரசு தமிழக லஞ்ச ஒழிப்பு துறை மூலம் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது, இதில் பல ஆதாரங்களை கைப்பற்றி இருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை.

இதில் கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வலங்கள் துறையில் நடந்த 1020 கோடி முறைகேடு தொடர்பான ஆதாரங்களை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கைப்பற்றி இருந்த நிலையில், முதல்வர் விஜய் கவனத்திற்கு அந்த வாட்ஸ் ஆப் ஆதாரங்கள் சென்று இருக்கிறது. இதனை தொடர்ந்து, சட்டசபையில் தான் தன்னுடைய பேச்சு முடிந்த அடுத்த நிமிடமே, இந்த ஆதாரங்கள் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் சட்டசபையில் முதல்வர் விஜய் பேசி முடித்த உடனே கே என் நேரு மீது F I R பதிவு செய்துள்ள தகவலை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டுள்ளது, மேலும் ஏற்கனவே ஒரு எப் ஐ ஆர் கே என் நேரு மீது பதியப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தவெக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு மற்றும் அவருடைய உறவினர்கள் மீது இரண்டாவது எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து கே என் நேரு மீது எப் ஐ ஆர் பதிவு செய்ய தொடர்ந்து 3 கடிதங்கள் தமிழக கவல்த்துறைக்கு அனுப்பியது அமலாக்க துறை, ஆனால் அதை தவெக அரசு செய்துள்ளது, இப்படியான சூழலில் தற்பொழுது நடவடிக்கை எடுக்க வேண்டிய அமலாக்க துறை, சற்று அமைதியாக இருந்து வருவதின் பின்னணியில் திமுகவுக்கு மத்திய பாஜக அரசு கரிசனம் காட்டுகிறதா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் மாஜி அமைச்சர்கள் செய்த முறைகேடுகளுக்கு முதல்வர் விஜய் எப் ஐ ஆர் பதிவு செய்து தன்னுடைய கடமையை செய்துவிட்டார், ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமலாக்க துறை விரைந்து செந்தில்பாலாஜியை தட்டி தூக்கி உள்ளே போட்டது போன்று முன்னாள் அமைச்சர் கே என் நேருவை உள்ளே தூக்கி போடாமல் என் தாமதிக்கிறது என்கிற விவாதம் தற்பொழுது எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here