நம்ம வீட்டு தாயும் பெண் தான்… நேரடியாக எச்சரித்த விஜய்… மூக்குடைபட்டு அசிங்கப்பட்ட உதயநிதி…

0
Follow on Google News

சமீபத்தில் பொது மேடையில் உதயநிதி பேசிய சர்ச்சைக்கு பேச்சுக்கு சட்டபையில் உதயநிதி இருக்கும் போதே எச்சரிக்கும் விதமாக பேசி பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் இனி போகிற போக்கில் வாய்க்கு வந்ததை பேசிட்டு போனால் தூக்கி உள்ளே போட்டு கம்பி என்ன விட்டுடுவேன் என்கிற தோரணையில் அமைந்து இருந்தது முதல்வர் விஜய்யின் சட்டசபை பேச்சு.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சையில் நடந்த திமுக கண்டன ஆர்பாட்டத்தில் உதயநிதி பேசிய அநாகரிகமான பேச்சு தமிழகம் முழுவதும் உள்ள தாய்மார்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது, இதனை தொடர்ந்து சட்டம் தான் கடமையை செய்யும் என்பது போன்று அதிகாலை சென்று உதயநிதியை தட்டி தூக்க சென்றது முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் காவல் துறை, ஆனால் பாத்ரூமில் இருக்கிறார் உதயநிதி என உதயநிதி தரப்பில் தெரிவிக்க.

ஒருவழியாக பாத்ரூமில் இருந்து வெளியே வந்த உதயநிதி ஸ்டாலினை கைது செய்து போலீஸ் டெம்போ வேனில் அழைத்து சென்று அன்று ஒரு நாள் முழுவதும் உதயநிதியை அலைக்கழித்து, இனி பெண்கள் குறித்து பேசினால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள் என விஜய் தலைமையிலான தவெக அரசு உதயநிதிக்கு பாடம் புகட்டியது. இந்நிலையில் பெண்கள் குறித்து அநாகரிகமாக பேசிய உதயநிதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சட்டசபையில் பேசிய விஜய்

அரசியல் ரீதியாக ஒருத்தருக்கு ஒருத்தர் என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.ஆனால் அதே அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் நம்ம மக்களையோ இல்லை, நம் பெண்களையோ தாழ்த்தி தரம் தாழ்ந்து பேசுவது எல்லாம் வேண்டாம். அண்மைக்காலமாக நம் தமிழகத்தில் ஒரே ஆபாச நதியா ஓடிக்கிட்டு இருக்கு, வன்ம நதியாக ஓடிக்கிட்டு இருக்கு. நம் வீட்டில் இருக்கிற ஒரு தாயாக, அக்காவாக, தங்கையாக கூடவே இருக்கிறதும் அதே பெண்கள்தான்.

அதை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் எல்லோரும் நல்ல முறையில் பேசினால் நன்றாக இருக்கும். எனக்கு திரைத்துறையில் மக்கள் கொடுத்திருக்கும் இடமாக இருந்தாலும் தற்போது கொடுத்திருக்கும் இடமாக இருந்தாலும் அது சாத்தியமானதற்கு காரணம் நம் வீட்டு பெண்கள்தான். அதனால் இந்த பெண்களை யாராவது அசிங்கமாக தரம் தாழ்ந்து பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருந்து இந்த சட்டசபையில் எத்தனை அவமானங்களை தாங்கிக் கொண்டிருந்தார் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற அவமானங்கள் இனி வருங்காலத்தில் எந்த பெண்களுக்கும் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

அரசியல் ரீதியாக என்ன வேணாலும் கமென்ட் பண்ணிக்கலாம், ஹார்ஷான கமென்ட்ஸா கூட இருக்கலாம் என விஜய் தெரிவித்திருந்தார்.

இதில் ஆபாச நதியா ஓடிக்கிட்டு இருக்கு, வன்ம நதி என்று உதயநிதியை தான் மறைமுகமாக முதல்வர் விஜய் சட்டசபையில் உதயநிதி இருக்கும் போதே எச்சரித்து இருக்கிறார் என்பது ஒளிவு மறைவு இன்றி புரிந்து கொள்ள முடிகிறது என தமிழக மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள், காரணம் உதயநிதி சமீபத்தில் கைது செய்யப்பட்ட போது, ஆபாச நிதி, வன்ம நிதி என பலரும் விமர்சனம் செய்தனர், அதையே சற்று மாற்றி ஆபாச நதி, வன்ம நதி என்று சட்டசபையில் முதல்வர் பேசி இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

அந்த வகையில் திங்கள் கிழமை பேசுகிறேன் ஆனால் யாரும் வெளியே ஓடி விட கூடாது என முதல்வர் விஜய் ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில், எங்கே முதல்வர் பேசி கொண்டிருக்கும் போதே இதோ ஓடிவிட்டார்கள் என்று கிண்டல் செய்யப்படுவோம் என்கிற காரணத்தால், அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை என முதல்வர் பேசி முடிக்கும் வரை திமுகவினர் சட்டசபையில் இருந்தது போன்று அமைந்து இருந்தது சட்டசபை நிகழ்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here