அடங்காத செந்தில்பாலாஜி… தப்பிக்க 30 கோடி வரை பேரம்… உச்சகட்ட கோபத்தில் விஜய்…

0
Follow on Google News

செந்தில்பாலாஜி கழுத்தை நெருக்கும் அளவுக்கு வழக்குகள் அவரை சுற்றி இருக்க, மேலும் மேலும் தப்பு மேல் தப்பு செய்து முதல்வர் விஜய் கோபத்திற்கு உள்ளாகி வருகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று இருக்கு அதை முடிக்காம விடமாட்டோம் என்று மறைமுகமாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பொது மேடையில் வைத்தே அமைச்சர் ஆதவா அர்ஜுனா எச்சரிக்கும் விதமாக பேசி இருந்தார்.

அந்த வகையில் தவெக ஆட்சிக்கு வந்த உடனே திமுக முன்னாள் அமைச்சர்களில் முதல் முதலில் டார்கெட் செய்யப்பட்ட நபர் செந்தில்பாலாஜி, முதல்வராக பதவி ஏற்று கரூருக்கு முதல்வர் சென்ற போது, முதல்வர் விஜய் கரூர் மண்ணில் கால் வைக்கும் போது செந்தில்பாலாஜி சிறையில் இருக்க வேண்டும் என செந்தில்பாலாஜியை கைது செய்ய மிக தீவிரம் காட்டியது தவெக அரசு, ஆனால் எதோ ஒரு வகையில் கைதில் இருந்து மிஸ் ஆனார் செந்தில்பாலாஜி.

கரூர் விவகாரத்திலே செந்தில்பாலாஜி மீது கடும் கோபத்தில் முதல்வர் விஜய் இருக்க, ஆனால் தவெக ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் ஆட்சியை கவிழ்க்க தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடமே பேரம் பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு , தலைமறைவான செந்தில்பாலாஜி பின்பு ஜாமினில் வெளியே வந்திருக்கும் அவர், மேலும் விஜய்க்கு எதிரான வேளைகளில் இறங்கி மீண்டும் விஜய்யின் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

கடந்த திமுக ஆட்சி காலத்திலே கே என் நேரு, செந்தில்பாலாஜி ஆகியோர் சொந்தமான இடங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை மேற்கொண்டது, இதில் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தமிழக கவல்த்துறையிடம் கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்ய கடிதம் அனுப்பி இருந்தது அமலாக்க துறை.

ஆனால் அப்போதைய இருந்த திமுக அரசு கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது, ஆனால் த வெக ஆட்சிக்கு வந்த உடன் அமலாக்க துறை அனுப்பிய கடிததின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு மீது எப் ஐ ஆர் பதிவு செய்தது, அதாவது கே என் நேரு மீது மூன்று எப் ஐ ஆர் பதிவு செய்யவேண்டிய நிலையில் ஒரு எப் ஐ ஆர் தான் தவெக அரசு பதிவு செய்துள்ளது, மீதம் இரண்டு எப் ஐ ஆர் எப்போது வேண்டும் என்றாலும் தவெக அரசு பதிவு செய்யலாம்.

அதே போன்று முன்னாள் அமைச்சர் ஏ வே வேலுவுக்கு சொந்தமான இடங்களில் தவெக அரசு நடத்திய லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்து எந்த நேரத்திலும் ஏ வ வேலு மீது வழக்கு பதிவு செய்யப்படலாம், இப்படி திமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தவெக அரசின் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், இதில் செந்தில்பாலாஜி மற்றும் சேகர் பாபு ஆகிய இருவர் விரைவில் கைதாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தவெக அரசு தொடர்ந்தால் நமக்கு ஆபத்து, வரும் நவம்பர் மாதம் , தீபாவளி முடிந்ததும் தவெக அரசை கவிழ்க்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கான வேளைகளில் முன்னாள் முக்கிய திமுக அமைச்சர்கள் இறங்கி இருக்கிறார்கள், அதில் செந்தில்பாலாஜியிடம் முக்கிய பொறுப்பு ஒப்படைக்க பட்டிருக்கிறது, ஒவ்வொரு தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 30 கோடி என பேசி 10ல் இருந்து 15 சட்டமன்ற உறுப்பினர்களை தூக்க வேண்டும்,

இதற்காக சுமார் 1500 கோடியை செலவு செய்ய தயாராக இருக்கிறது மாஜி திமுக அமைச்சர்கள் என்கிற தகவல் முதல்வர் விஜய் கவனத்துக்கு சென்று இருக்கிறது, அதுவும் இதை முன்னின்று செய்வது செந்தில்பாலாஜி தான் என்கிற தகவல் முதல்வர் விஜய்யை கோபம் அடைய செய்திருக்கிறது. அந்த வகையில் வெளியில் இருந்தால் தானே இந்த வேலையை செய்வ, தூக்கி சிறையில் போடுவதற்கான வேலையை தீவிரப்படுத்தி இருக்கிறாராம் முதல்வர் விஜய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here