கருணாநிதி வாரிசு என்பதற்காக மட்டுமே முக ஸ்டாலினுக்கு திமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு தலைமை பொறுப்புக்கு வரவில்லை, மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவர் இந்த கட்சிக்காக அனுபவித்த கொடுமைகள் ஏராளம் என்று முக ஸ்டாலின் அரசியலுக்கு அடித்தளமாக இருந்த இந்த மிசா குறித்த பிம்பம் ஆட்டம் கண்டிருக்கிறது. கடந்து 2019 காலகட்டத்திலே முக ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டார், ஆனால் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்கிற சர்ச்சை வெடித்தது.
அப்போது பலரும் சந்தேகத்துடன் திமுகவை நோக்கி குறிப்பாக முக ஸ்டாலினை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி, மிசா காலத்தில் முக ஸ்டாலின் கைது செய்யப்பட்ட போது, அவர் கைதானதற்கு வழங்கப்பட்ட Detention Copy யை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கலாம், மிசாவில் கைது செய்யப்பட்ட அனைவர்க்கும் Detention Copy இருக்கும் போது, அதே மிசாவில் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படும் முக ஸ்டாலினின் Detention Copy எங்கே என்று கடந்த 2019ம் ஆண்டு மிசா குறித்து சர்ச்சை வெடித்த போதே கேட்கப்பட்டது.

ஆனால் திமுக தலைமையோ அல்லது சம்பந்தப்பட்ட முக ஸ்டாலினோ அந்த Detention Copy யை வெளியிடவில்லை , இதனால் மிசா குறித்த ஸ்டாலின் சர்ச்சை தொடர்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில் சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய். மிசாவை பார்தோம் , மிஷாவை பார்தோம் என்று சொல்கிறார்கள், ஆனால் மிசா குறித்த வரலாறு எங்களுக்கும் தெரியும் என்று முதல்வர் பேசிய மிசா குறித்த இந்த பேச்சுக்கு பின்பு மீண்டும் முக ஸ்டாலினின் மிசாவில் கைது செய்தாரா.? அல்லது மிசா காலத்தில் கைது செய்தாரா.? என்கிற விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலையின்போது, மிசா சட்டம் அமலில் இருந்த காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவர் மீது மிசா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா.? அல்லது வேறு ஒரு வழக்கிற்காக கைது செய்யப்பட்டு மிசா காலத்தில் கைது செய்யப்பட்டாரா.? என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.
காரணம், மிசா காலத்தில் முக ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபட வில்லை, படிப்பை முடித்த கையோடு வேலைக்கு கூட போகாமல் திருமணம் செய்து கொண்ட காலம் அது, அப்படி இருக்கையில் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பழிவாங்க வேண்டும் என்று இந்திரா காந்தி முடிவு செய்து இருந்தால், அரசியல் ரீதியாக அன்றைய காலகட்டத்தில் எம் ஜி ஆர் க்கு போட்டியாக பிள்ளையோ பிள்ளை போன்ற படங்களில் நடிக்க வைத்து போட்டியாக கருணாநிதியால் வளர்க்கப்பட்டு வந்த கருணாநிதியின் மூத்த மகன் முக முத்துவை மிசாவில் கைது செய்து இருக்கலாம்.
கருணாநிதியின் வாரிசுகளான முக ஸ்டாலினின் அண்ணன் முக அழகிரி, தப்பி முக தமிழரசு என யாருமே கைது செய்யப்படவில்லை, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் முரசொலி மாறன் மட்டுமே மிசாவில் கைது செய்யப்பட்டார், அப்போது அவரின் அரசியல் செயல்பாடுகள் தீவிரமாக இருந்தது அதனால் முரசொலி மாறன் மிசாவில் கைதானார், ஆனால் முக ஸ்டாலினை மிசாவில் கைது செய்யவேண்டிய அவசியம் என்ன.? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மிசாவில் தான் கைது செய்யப்பட்டார் என்பதற்கு ஆதாரம் எங்கே என்று எதிர் தரப்பினர் கேள்வி எழுப்பினால், திமுக தரப்பில் அதற்கான காண்பிக்கும் ஆதாரம், கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி , மற்றும் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் என்கிற புத்தகம், இதை எப்படி ஆதாரமாக ஏற்று கொள்ள முடியும்.
முக ஸ்டாலின் மிசாவில் தான் கைது செய்யப்பட்டார் என்றால், மிசாவில் கைது செய்யப்பட்ட முக ஸ்டாலின் Detention Copy எங்கே.? அந்த Detention Copy யில் எதற்காக முக ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிட்டு இருக்கும், அப்படி இருக்கையில் Detention Copy யை முக ஸ்டாலின் தரப்பில் வெளியிடுவதில் என்ன தயக்கம், அல்லது முக ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்ட போது கொடுக்கப்பட்ட Detention Copy திட்டமிட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் அளிக்கப்பட்டதா.? எங்கே அந்த Detention Copy .? இது இன்று தமிழக மக்கள் ஒருமித்த குரலுடன் எழுப்பும் கேள்வி.

