விஜய் வீட்டின் கதவை தட்டிய அன்பில் மகேஷ்…. இந்த பக்கமே வர கூடாது… ஓட ஓட விரட்டிய விஜய்…

0
Follow on Google News

அதிமுக ஆட்சிக்கு வந்தால், அதற்கு முன்பு திமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் பார்க்க வேண்டியவர்களை பார்த்து தங்களை பாதுகாத்து கொள்வார்கள், அதே பார்முலாவை முதல்வர் விஜய்யிடம் பின்பற்றினால் நடக்குமா.? அப்படி ஒரு பார்முலாவை பின்பற்றி தான் தற்பொழுது முக்குடைபட்டு இருக்கிறார் முன்னாள் பள்ளி கல்வி துறை அமைச்சரும், நடிப்பு அரக்கன் என்று வலைதளவாசிகளால் அழைக்கப்பட கூடிய அன்பில் மகேஷ் பொய்யா மொழி.

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்ததில் இருந்தே கடந்த திமுக ஆட்சியில் நடந்த ஒவ்வொரு துறையின் ஊழல்களும் தூசி தட்டி எடுக்கப்பட்டு ஒவ்வொரு தகவலும் முதல்வர் விஜய் கவனத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த மாஜி அமைச்சர்கள் பலரும் டார்கெட் செய்யப்பட்டு வருகிறார்கள், மேலும் ஆட்சிக்கு புதுசு தமக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்கிற திமுக மாஜிகளின் திட்டத்தை தவிடு பொடியாக்கும் வகையில்.

திமுகவுக்கு ஆதரவான அரசு உயர் அதிகாரிகளை பெரும்பாலும் மாற்றி விட்டார் முதல்வர் விஜய். இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தரப்பு மிக பெரிய முறைகேடுகளில் சிக்கிய ஆவணங்கள் அணைத்து முதல்வராக விஜய் பதவி ஏற்ற ஒரே வாரத்தில் முதல்வர் டேபிளுக்கு சென்று இருக்கிறது. இதனை தொடர்ந்து தவெக ஆட்சி பொறுப்பேற்ற மிக குறுகிய காலத்திலே பள்ளி கல்வி துறையில் புரோக்கர் போல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வசூல் வேட்டை நடத்திய பி டி அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் 100 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக பிடி அரசகுமார் கைது செய்யப்ட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக செய்திகள் வெளியானாலும் கூட, இதில் குறைந்தது 300 கோடி வரை முறைகேடு நடனத்திருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிடி அரசகுமாரிடம் நடத்திய விசாரணையில்,

கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் குடும்ப நபர்களிடம் தான், நான் வசூல் செய்த பணத்தை கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் பிடி அரசகுமார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் எந்த நேரமும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்கிற பரபரப்பு நீடித்து வளர்கிறது.

மேலும் விசாரணை இறுதியில் அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கைது செய்ய கூட வாய்ப்புள்ளது என்றும், அதற்கான போதிய ஆதாரம் முதல்வர் விஜய் கைவசம் உள்ளது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர் விஜய்யின் நெருக்கமான வட்டாரத்தில் இருக்க கூடிய ஒருவரை அணுகி தன்னை காப்பாற்றி கொள்ள முயற்சித்து இருக்கிறார் அன்பில் மகேஷ் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது முதல்வர் விஜய்யின் புறவாசல் கதவை தட்டி யாருக்கும் தெரியாமல் அண்டர் டீலிங் போட்டு தன்னை பாதுகாத்துக்கொள்ள முயற்சித்து இருக்கிறார் அன்பில் மகேஷ், இந்த தகவல் அன்பில் மகேஷ் அணுகிய நபர் மூலமாகவே முதல்வர் கவனத்துக்கு சென்று இருக்கிறது, அதற்கு முதல்வர் விஜய், மக்கள் ஊழலுக்கு எதிராக எனக்கு வாக்களித்து இந்த முதல்வர் நாற்காலியில் அமர செய்து இருக்கிறார்கள்.

ஊழல் செய்தவர்களை காப்பாற்ற நம்மை மக்கள் தேர்தெடுக்கவில்லை, ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என கட்டமாக தெறிவித்த முதல்வர் விஜய், அன்பில் மகேசுக்கு ஆதரவாக பேச வந்தவருக்கு செம்ம டோஸ் விட்டு ஓட விட்டிருக்கிறார், இதனை தொடர்ந்து முதல்வர் விஜய்யின் புறவாசல் வழியாக தூது அனுப்பிய அன்பில் மகேஷ் முயற்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அடுத்து எந்த நேரமும் பி டி அரசகுமார் வழக்கில் அன்பில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்கிற பரபரப்பு நீடித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here