எங்களை பார்த்து காப்பி அடிப்பதா.? ஸ்டாலினை விமர்சித்தது போல் எடப்பாடியை விமர்சிப்பாரா கமல்ஹாசன்.!

0
Follow on Google News

ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அதிமுக, திமுக போன்ற கட்சிகள் கூட்டணி பங்கீட்டில் முக்கியத்துவம் அளித்து வந்தது. தற்போது திமுகவுக்கு கூட்டணி பங்கீடு ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் ஐபேக்கின் ஐடியாவால் விடியலுக்கான முழக்கம் என்ற நிகழ்ச்சி திமுக சார்பாக திருச்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பை கேட்ட மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம் எங்கள் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன்.” என்று திமுகவை விமர்சித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதேபோல இன்று தமிழக முதல்வர் எடப்பாடி செய்தியாளர்கள் சந்திப்பில் நாங்கள் வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.1500/- உதவித்தொகையாக வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். நாங்கள் அறிவிக்க இருந்த திட்டங்களை ஸ்டாலின் மோப்பம் பிடித்து எங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டார். ஸ்டாலின் எந்தப்பக்கம் கால் வைத்தாலும் அந்த பக்கம் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் எடப்பாடி.
தமிழக முதல்வரின் சட்டமன்ற தேர்தலுக்கான அதிரடி திட்டம் வெளிவந்த சில நிமிடங்களில் இந்த செய்தியை அனைவராலும் பகிரப்பட்டு வைரலானது.

ஏற்கனவே ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்ததாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், எடப்பாடியும் இந்த அறிவிப்பை வெளியிட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது கட்சியின் அறிக்கையை காப்பி அடித்ததற்காக ஸ்டாலினை விமர்சித்தது போல் எடப்பாடியின் விமர்சிப்பாரா?