தொகுதியை கைப்பற்றுவதில் கனிமொழி கோஷ்டி – ஸ்டாலின் கோஷ்டி இடையே கடும் மோதல்.! திமுகவில் உச்சகட்ட பரபரப்பு.!

0
Follow on Google News

வருகின்ற சட்டசபை தேர்தலில் தொகுதியை கைப்பற்றுவதில் திமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது, 2011 ஆம் ஆண்டு முக அழகிரியை திமுகவில் இருந்து முக ஸ்டாலின் ஓரம் கட்ட தொடங்கியதும். அடுத்து நாமும் இதே போன்று ஓரம் கட்ட படுவோம் என உணர்ந்த கனிமொழி தனக்கென ஒரு ஆதரவாளர் வட்டத்தை திமுகவில் உருவாக்கினார். இதனை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுக்கு தேவை படும் உதவிகளை செய்துகொடுத்து அவர்களை தீவிர விசுவாசியாகவும் மாற்றி வைத்துள்ளார் கனிமொழி.

கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் உறுதி செய்த பின்பு, கருணாநிதியை நேரில் சந்தித்த கனிமொழி 18 தொகுதிகளில் உள்ள வேட்பளர்களை மாற்றி அந்த தொகுதிகளில் தனது ஆதரவாளர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பை பெற்று தந்தார், இதன் பின் கனிமொழி நினைத்தால் கட்சியில் எதையும் சாதிக்க முடியும் என திமுக மத்தியில் பேசப்பட்டதை தொடர்ந்து, மேலும் அதிகரித்தது கனிமொழியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை.

இந்நிலையில் வருகின்ற சட்டசபை தேர்தலின் தனது ஆதரவாளர்களுக்கு குறைந்தது 30 தொகுதிகள் வரை பெற்று தருவதில் உறுதியாக இருக்கிறார், இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருக்கும் தனது ஆதரவாளர்களிடம் தேர்தல் பணியை தொடங்க வலியுறுத்தியதை தொடர்ந்து அவர்களும் தேர்தல் பணியை தொடங்கியுள்ளனர், ஆனால் அதே தொகுதியில் ஏற்கனவே ஸ்டாலின் ஆதரவாளர்கள் தேர்தல் பணியை செய்து வருவதால் யாருக்கு இந்த தொகுதி என்பதில் உச்சகட்ட போட்டி நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து யாருக்கு தொகுதி என்பதில் அந்தந்த மாவட்ட செயலார்களுடன் திமுக தலைமை ஆலோசனை செய்து முடிவு செய்யும் என கூறப்படுகிறது, ஆனால் மாவட்ட செயலர்களுக்கு போட்டியாகவே பல தொகுதிகளில் கனிமொழி ஆதரவாளர்கள் தொகுதியை கைப்பற்ற முயற்சி செய்துவருகின்றனர், கடந்த ஒரு வரமாக கனிமொழி சென்னையில் இருந்தார், இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கனிமொழி ஆதரவாளர்கள் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று தொகுதியை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர்,

நீங்க தைரியமாக ஊருக்கு சென்று தேர்தல் பணியை தொடருங்கள், உங்களுக்கு தான் சீட் என அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார் கனிமொழி. மேலும் திமுகவின் தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் ஐபேக் நிறுவனம் நடத்திய ஆய்வில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்பதில் கனிமொழி ஆதரவாளர்கள் பெயர்கள் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .