திருப்பரங்குன்றம் தொகுதியை குறிவைக்கிறதா கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை?

0
Follow on Google News

சட்டமன்ற உறுப்பினரும் திரைப்பட நடிகருமான கருணாஸ் அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மாநில இளைஞரணி தலைவர் அஜய் வாண்டையார் அவர்களின் தலைமையில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இரண்டு மாத காலமாக தொடர்ந்து திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து வேலை செய்கிறீர்களே கருணாஸ் இங்கு போட்டியிட வாய்ப்புள்ளதா என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு மதுரை மாவட்ட இளைஞரணி தலைவர் கூறியதாவது இது பற்றி தலைமைதான் முடிவு செய்யும், யாருடன் கூட்டனி, எத்தனை தொகுதிகள் என்பதை தொண்டர்களிடம் அண்ணன் கருணாஸ் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதியும் ஒன்று என்பதால் தலைமையிடம் இது பற்றி எடுத்து கூறி வருகிறோம் என்று கூறினார்…