1923 முதல் 2025 வரை… திருப்பரங்குன்றம் மலையின் வரலாறும்.. தொடரும் முருகபக்தர்களின் போராட்டமும்…

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசிவிஸ்வநாதர் கோவில், மலைக்கு கீழே தமிழ் கடவுள் முதல் படை விட்டான முருகன் கோவில் உள்ளது. இதே மலையில் தன மதுரையை ஆட்சி புரிந்த விஜயநகர மன்னரால் கொல்லப்பட்ட சிக்கந்தர்பாபாஷா நினைவு தர்க்காவும் அமைத்துள்ளது. தர்கா தவிர்த்து மலையில் பெருமபாலான பகுதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கே சொந்தம்.

தற்பொழுது பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கும் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தான் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கார்த்திகை தினம் மற்றுமின்றி விசேஷ தினத்திலும் தீபம் ஏற்றப்பட்ட வந்திருக்கிறது. இடையில் பிரிடிஷ் காலத்தில் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற தடை விதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சித்த போது பிரச்ச்னையாக உருவெடுத்து, தற்பொழுது வரை மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்கிற முருக பக்தர்களின் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில் 1923ல் வந்த நீதிமன்ற தீர்ப்பில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா ,கிழே அடிவாரத்தில் உள்ள நெல்லித்தோப்பு பகுதி, நெல்லி தோப்பில் இருந்து தர்காவுக்கு செல்லும் பாதை , இவை மட்டுமே தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது என்றும், மற்றபடி மலையில் உள்ள மற்ற அணைத்து பகுதிகளும் முருகன் கோவிலுக்கு சொந்தம் என தீர்ப்பு வருகிறது.

இந்த தீர்ப்பு ஸ்டெ வாங்கி நிறுத்தப்படுகிறது. இதன் பின்பு 1930ல் உச்ச நீதிமன்றத்திற்கு இணையான லண்டன் பிரிவி கவுன்சில் 1923 தீர்ப்பை உறுதி படுத்தியது. தொடர்ந்து நடந்து வந்த சட்டப்போராட்டத்தின் தொடர்ச்சியாக 2005ம் ஆண்டு மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பீஸ் கமிட்டி போடப்பட்டது. அப்போது மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபா தூணில் தீபம் ஏற்றுவதர்க்கு ஆட்சேபணை உள்ளதா என தர்கா நிர்வாகத்திடம் கேட்டபோது, அந்த எதிர்ப்பு இல்லை என எழுத்து பூர்வமாக தர்கா நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் டிசம்பர் 2024 ராஜபாளையத்தை சேர்ந்த ஒருவர், மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில், ஆடு பலி கொடுப்போம் என மலையில் எற முயற்சிக்கிறார், மலையில் மிருக பலி அனுமதி இல்லை என போலீசார் தடுத்து நிறுத்துகிறார்கள், அடுத்த சில தினத்தில் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலைக்கு வருகிறார், அவருடன் வந்தவர்கள் மலையில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிடும் புகைப்படம் வெளியாகிறது, மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையை சிக்கந்தர் மலை என குறிப்பிடுகிறார் நவாஸ் கனி,

அடுத்த ஒரு வாரத்தில் சமணர் கால பாறைகள் பச்சை நிறம் பெயிட் அடிக்கப்பட்டு அத்துமீறப்படுகிறது, காவல்த்துறை துணையுடன் தொல்லியல் துறையினர் பச்சை வண்ண பெயிண்ட்டை நீக்கி பழமை மீட்டு எடுத்தனர். இதன் பின்பே திருப்பரங்குன்றம் விவகாரம் விஸ்வருபம் எடுத்து, இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

2025 ஜூன் மாதம், மலையின் பெயர் சிக்கந்தர் மலை இல்லை திருப்பரங்குன்றம் மலை தான் என இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெபென்ச் தீர்ப்பு வழங்கியது.இந்து முன்னனி தலைவர் கடேஸ்வரன் தலைமையில் நடந்த முருக பக்தர் மாநாட்டில் லட்சக்கணக்கான மக்களை ஓன்று திரட்டி, வரும் கார்த்திகை தீபம் அன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என மக்கள் ஆதரவை பெற்றார்.

கார்த்திகை தீப கோரிக்கை வழக்கு ராம ரவிக்குமார் தாக்கல் செய்கிறார், உயர்நிதிமன்றம் நீதிபதி ஜி.ஆர்.சாசாமிநாநாதன் நேரடியாக திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு செய்கிறார், 2025 டிசம்பர் 1ம் தேதி தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என வழங்கிய தீர்ப்பு, முருக பக்தர்கள் மனம் குளிருபடி செய்தது. ஆனால் திமுக அரசு நீதிமன்றம் உத்தரவை மதித்து மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றாமல், நீதிமன்ற தீர்ப்பை உதாசீன படுத்தி இருப்பதை எதிர்த்து தொடர்கிறது சட்ட போராட்டம்.