திமுக மந்திரிசபை இடம்பிடிப்பதில் குடுமி பிடி சண்டை.! மந்திரி பதவி இல்லையென் கட்சி தாவ போவதாக மிரட்டல்.! ஸ்டாலின் விரக்தி.!

0
Follow on Google News

விறு விறுப்பாக நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் வெளிவர இருக்கும் நிலையில், அடுத்தது அதிமுக ஆட்சி தான் என்று அதிமுக தரப்பில் இருந்தும், இல்லை திமுக தான் ஆட்சி அமைக்கும் என திமுக தரப்பினரும் நம்பிக்கையில் இருந்து வருகின்றனர், இந்நிலையில் யார் அடுத்தது ஆட்சி அமைக்க போவது என் மக்களும் மிகுந்த குழப்பத்தில் இருந்து வருகின்றனர், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்னும் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், மந்திரிசபை அமைக்கும் பட்டியல் தயாரிக்கும் பணியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் உதயநிதி தனக்கு வேண்டிய சிலரையும், ஸ்டாலின் மருமகன் சபரீசன் தனக்கு வேண்டிய சிலரையும் மந்திரி சபையில் இடப்பெற வைப்பதில் முயற்சி செய்து வருகின்றனர், மேலும் அரசியல் வாரிசுகளும் மந்திரி சபையில் இடம்பெற முயன்று வருகின்றனர்.

துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை எதிர்த்து போட்டியிடும் அதிமுகவில் இருந்து வந்த தங்கதமிழ்செல்வன் வெற்றி பெற்றால் மந்திரி பதவி தருவதாக தேர்தலுக்கு முன்பே ஸ்டாலின் உறுதி யளித்ததாக கூறப்படுகிறது, அதே போன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றாலும் அமைச்சர் பதவி தருவதாக உறுதியளித்துள்ளார் ஸ்டாலின், மேலும் ஏ.வ,வேலு, மற்றும் துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் சேகர் பாபு ஆகியரை மந்திரிசபை பட்டியலில் ஸ்டாலின் இணைந்துள்ளார்.

இதில் வாரிசு அரசியல்வாதிகள் மந்திரிசபையில் இடம்பெறுவது பற்றி சிறிதும் சிந்திக்காமல், குறிப்பிட்ட இலாக்காவை கைப்பற்றுவதில் போட்டி போட்டு வருகின்றனர், அதில் PTR தியாகராஜன் நிதி துறையை பெறுவதில் உறுதியாக இருக்கிறார், அதே போன்று TRB ராஜா, அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு ஆகியோர் குறிப்பிட்ட இலாகாவை குறிவைத்துள்ளனர், இதில் மாவட்ட செயலாளராக போட்டியிட்டு தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் திமுக வேட்பாளர்கள் பலரும் மந்திரி சபையில் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், திமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் பெயர்கள் ஸ்டாலின் குடும்பத்தினர் தயாரித்து வரும் மந்திரிசபை பட்டியலில் இடம் பெறாத நிலையில் ஏற்கனவே திமுக ஆட்சியில் மந்திரியாக இருந்துவிட்டு தற்போது மந்திரி சபையில் இடமில்லை என்றால் பாஜகவுக்கு சென்று விடுவோம் என ஸ்டாலினை மறைமுகமாக முன்னாள் திமுக அமைச்சர்கள் மிரட்டி வருவதாக கூறபடுகிறது. இந்நிலையில் தேர்தல் ,முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே திமுகவில் மந்திரிசபை அமைக்கும் பட்டியல் தயாரிப்பதில் குடுமி பிடி சண்டை நடைபெற்று வருவது முக ஸ்டாலினை விரக்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.