நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி மிகப்பெரிய விவாத பொருளாக மாறி இருக்கிறது. குறிப்பாக பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பல அரசியல் நிபுணர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் மக்கள் மத்தியில் திமுகவிற்கு கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வரும் நிலையில் இப்படி திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் மக்கள் எப்படி மீண்டும் திமுகவிற்கு ஆட்சி அமைக்க வாக்களிப்பார்கள் என்கின்ற கேள்வி பலரும் எழுப்பி வருகிறார்கள், அந்த வகையில் இந்த கருத்து கணிப்பு முழுக்க முழுக்க ஒரு செட்டப் கருத்துக் கணிப்பு என்பதையும் அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அந்த வகையில் எக்ஸிட் போல் என்பது முழுக்க முழுக்க திமுக தரப்பில் நடத்தும் நாடகம் என்பதையும் அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. குறிப்பாக தமிழக முழுவதும் சுமார் 70 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு நிறுவனம் எப்படி தமிழக முழுவதும் சென்று ஆய்வு நடத்திருக்க முடியும் என எழுப்பப்படும் கேள்விகளுக்கு இது நிச்சயம் சாத்தியம் இல்லை என்பது பதிலாக இருக்கிறது.
அதாவது குறைந்தது தமிழக முழுவதும் உள்ள சுமார் 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் அதில் பாதி 35 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்காவது தற்பொழுது எக்ஸிட் போல் சர்வே வெளியிட்டுள்ள நிறுவனம் சென்றிருக்குமா? என்றால் அதற்கும் சாத்தியமில்லை. இப்படி ஏதோ ஒரு ஏசி அறையில் அமர்ந்து கொண்டு தங்களுக்கு சாதகமான ஒரு கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கின்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றும் ஒரு செயல் தான் இந்த எக்ஸிட் போல் என்கின்ற குற்றச்சாட்டு அரசியல் தளத்தில் எழுந்து வருகிறது.
குறிப்பாக தமிழக முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறிப்பாக கிராமங்கள் தோறும் மக்கள் எந்த மனநிலையில் வாக்களித்தார்கள் என்பதை கேட்டு அறிவதற்கான கட்டமைப்பு தற்போது வெளியிட்டுள்ள பல நிறுவனங்களிடம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள், இப்படி இருக்கையில் எதன் அடிப்படையில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று எக்ஸிட் போல் பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளது என்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமே பதில் இல்லை என்பதே எதார்த்தம்.
அந்த வகையில் தமிழக முழுவதும் எடுக்கப்பட்ட எக்ஸிட் போல் அல்ல திமுக தரப்பிலிருந்து தயார் செய்யப்பட்டு கொடுக்கப்பட்ட தான் இந்த எக்ஸிட் போல் என்றும், மேலும திமுக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியிட்டுள்ள இந்த நிறுவனங்களை பின்னோக்கி பார்த்தால் தொடர்ந்து அவர்கள் பாஜகவிற்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் செய்தி வெளியிட்டு வந்தவர்கள் தான் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் அரசியல் பார்வைகள்.
இந்த நிலையில் கடந்த முறை அதிமுக உட்கட்சிக்குள் பிரச்சனை வலுவான கூட்டணி இல்லாமல் 65 தொகுதிகளை வெற்றி பெற்ற நிலையில், இம்முறையும் மீண்டும் அதே 65 தொகுதிகள்தான் அதிமுக வெற்றி பெறும் என்பது நம்பக் கூடியதாக இல்லை, காரணம் இந்த முறை ஒற்றை தலைமை, வலுவான கூட்டணி மற்றும் திமுகவுக்கு எதிர்ப்பான மனநிலையில் மக்கள் இருக்கையில் நிச்சயம் மீண்டும் திமுக அவை வீழ்த்தி அதிமுக கூட்டணி ஆட்சியமைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அந்த வகையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்பதை மே 4ஆம் தேதி உணர்த்தும்போது தற்பொழுது வெளியாகும் கருத்துக்கணிப்பு அனைத்தும் போலியானவை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது

