அதிமுக தலைமையகத்தில் அடிதடி… ரத்த காயங்களுடன் EPS கோஷ்டி.. மாஸ் காட்டும் OPS கோஷ்டி..

0
Follow on Google News

சென்னை : அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் தலைமை யார் ஏற்பது என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில் தற்போது தலைமை பொறுப்பு ஒருவருக்கே என ஒரு தரப்பும் இருதலைமை வேண்டும் என மற்றொரு தரப்பும் சண்டையிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் இருவர் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என கூறிவருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒருவரே தலைமை பொறுப்பேற்க வேண்டும் என கூறிவருகிறார். இதுகுறித்து இருவருமே தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையலுவலகம் வந்திருந்தார்.

தொடர்ந்து நான்குநாட்களுக்கு மேலாக தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்திவரும் ஓபிஎஸ் நேற்று மீண்டும் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அவருக்கு அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பளித்தனர். ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் தலைமையகத்தில் கூடிவந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாரும் நேற்று வந்தார்.

அவர் அலுவலகம் உள்ளே நுழைந்தபோது அவருக்கு எதிராகவும் அவரை வரவேற்றும் தொண்டர்கள் முழக்கமிட்டனர். அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் அண்ணன் டிஜே வாழ்க என முழக்கமிட்டவாறே அவரை அழைத்துச்சென்றனர். இதனிடையே தீர்மானக்குழுவுடன் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் பொன்னையன் வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது உடம்பில் ரத்தக்காயங்களுடன் செய்தியாளர்களிடம் ஓடிவந்த பெரம்பூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் நீ எடப்பாடி ஆதரவாளரா என கேட்டு சில தன்னை தாக்கியதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில தொண்டர்கள் காயத்துடன் வெளியேறியதையும் காணமுடிந்ததாக செய்தியாளர்கள் தெரிவித்தனர். மேலும் செய்தியாளர்களும் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.