நான் சொன்னதை எடப்பாடி செய்யல்ல.. எந்த அர்த்தத்தில் வெற்றிபெறுவோம்.? ஓபிஎஸ் புலம்பல்.!

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி வெளிவர இருக்கும் நிலையில், யார் வெற்றி பெறுவார் என்பதில் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழல் உருவாகி உள்ளது. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திமுகவுக்கு சாதகமாக இருந்த தேர்தல் களம் அடுத்ததடுத்து நடந்த அரசியல் நடவடிக்கைகள் திமுக-அதிமுக இடையே கடும் போட்டி உருவாகி இறுதியில் வாக்கு பதிவின் போது கடும் இழுபறியில் முடிந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிந்து 5 நாட்கள் வரை அமைதியாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகளை அழைத்து அடுத்ததும் நமது ஆட்சி தான் என நம்பிக்கையுடன் தெரிவித்து வருவதாக தெரிவித்து வருகிறார், இதற்கு காரணம் உளவு துறை கொடுத்த தகவல் தான் என கூறப்படுகிறது, எடப்பாடி பழனிச்சாமியின் எந்த நம்பிக்கை திமுக தலைவர் முக ஸ்டாலினை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் நிலவரம் குறித்து தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளிடம் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார், அதில் நான் சொன்னது எதையும் எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை, தேமுதிகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்காக திட்டமிட்டே தொடக்கத்தில் இருந்து செயல்பட்டு வந்தார், அவரிடம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமூக முடிவு எட்டப்படாமல் என்னிடம் பேச தேமுதிக தரப்பில் இருந்து வந்தார்கள்.

ஆனால் அவர்கள் என்னிடம் வருவதை அறிந்து அவர்கள் வருவதற்கு முன்பே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களிடம் பிடி கொடுத்து பேச வேண்டாம் என தெரிவித்து விட்டார், தேமுதிக தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறியது நமக்கு தான் இழப்பு என தெரிவித்தவர், மேலும் அமமுக இணைப்பு பற்றி அவரிடம் எடுத்து கூறி கடும் முயற்சியில் ஈடுபட்டேன், டெல்லியில் உள்ள முக்கிய புள்ளிகள் கூட இது குறித்து எடப்பாடியிடம் பேசினார்கள்.

ஆனால் பிடிவாதமாக அதற்கு அவர் ஒப்பு கொள்ளவில்லை, இந்நிலையில் அமமுக தென் மாவட்டத்தில் அதிமுக வாக்குகளை கணிசமாக பிரித்துள்ளது, எனது அரசியல் அனுபவத்தில், இதற்கு முன் நடந்த அணைத்து தேர்தலிலும் அம்மா என்னை அழைத்து தேர்தல் நிலவரம் குறித்து கேட்பார், நான் தயக்கமின்றி உண்மையை தெரிவித்து விடுவேன். ஆனால் தற்போது எந்த நம்பிக்கையில் நாம் மீண்டும் ஆட்சி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார் என தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளிடம் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.