ஆக்சிஜன் இலவசமாக வழக்கும் ஸ்டெர்லைட் ஆலை தயார்.! டெல்லி போராட்டத்தினால் மருத்துவ உதவிகள் தடைபடும் அவலம்.!

0
Follow on Google News

இந்தியா முழுவதும் கொரோன தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கொரோன தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகிறது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவும் சுழல் உருவாகி உள்ள நிலையில், மேலும் மருத்துவ ஆக்ஸிஜன் அதிக அளவு தேவைப்படுகிறது.

இதனை தொடர்ந்து உத்திரபிரதேச அரசு புதிய மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் சுமார் 10 நிலையங்களை, 15 நாட்களுக்குள் உருவாக்க உத்தரவிட்டுள்ளது, இதில் 4 நிலையங்களை IFFCO அரசுடன் இணைந்து செயல்படும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஏற்படுத்துகிறது. இதே போன்று தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசுக்கு இலவசமா ஆக்சிஜன் தயாரித்து வழங்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனுவில் தெரிவித்துள்ளதாவது, மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும், அப்படி உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை தமிழக அரசுக்கு இலவசமாகவே வழங்கவும் தயாராக இருக்கிறோம் என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் மத்திய அரசியல் கோரிக்கை மனுவை வைத்துள்ளது வேதாந்த நிறுவனம் அதில்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தினசரி 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். கொரோனா நோயாளிகளுக்கு தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. தமிழக அரசுக்கு உதவும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதேப்போல் மத்திய அரசிடம் இந்த கோரிக்கையை வேதாந்தா நிறுவனம் வைத்துள்ளது.

நாடு பெரும் அச்சத்தில் இருக்கும் இந்த சூழலில் முக்கிய பெரும் நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகளுடன் கைகோர்த்து உதவி செய்ய தொடங்கியுள்ளது, ஆனால் தொடர்ந்து டெல்லியில் உள்ள எல்லையில் தேசிய நெடுஞ்சாலையை மறைந்து போராட்டம் நடத்தி வருவது அவசர மருத்துவ உதவிகளுக்காக வாகனங்கள் மூலம் எடுத்து செல்லும் மருந்துகள் குறித்த நேரத்தில் கொண்டு செல்ல முடியாமல் தடைகள் ஏற்படும் அவலம் ஏற்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.