இன்றைய ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம் : பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். தாய்மாமன் வழி உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : அனுபவம் ஏற்படும்.
பரணி : கீர்த்தி உண்டாகும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.

ரிஷபம் : உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். மனைவியின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

மிதுனம் : துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் கவனமாக இருக்கவும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். எண்ணிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் அளிக்க முயல்வீர்கள். புதிய மனை வாங்குவதற்கு சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
திருவாதிரை : வெற்றி கிடைக்கும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.

கடகம் : மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் வசூலாகும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். கல்வி பயில்பவர்களுக்கு தெளிவு உண்டாகும். அந்நியர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : பணவரவுகள் மேம்படும்.
பூசம் : நற்பெயர் கிடைக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் : பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சொத்துச்சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். அக்கம்-பக்கத்து வீட்டார்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : லாபம் உண்டாகும்.
உத்திரம் : திருப்தியான நாள்.

கன்னி : தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடக்கவும். தொழில் அலைச்சல்களால் லாபம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள். உடன்பிறப்புகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தம் : நிதானம் வேண்டும்.
சித்திரை : சுபவிரயங்கள் உண்டாகும்.

துலாம் : விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : வெற்றி கிடைக்கும்.
சுவாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
விசாகம் : அனுகூலமான நாள்.

விருச்சகம் : தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும். சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விசாகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
அனுஷம் : திறமைகள் வெளிப்படும்.
கேட்டை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு : ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள். தந்தையின் சொத்துக்களால் லாபம் உண்டாகும். பயணங்கள் தொடர்பான தொழில் புரிபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : அங்கீகாரம் கிடைக்கும்.
பூராடம் : லாபம் உண்டாகும்.
உத்திராடம் : சாதகமான நாள்.

மகரம் : உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : மந்தமான நாள்.
திருவோணம் : எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.

கும்பம் : முயற்சிகள் ஈடேறக்கூடிய அனுகூலமான நாள். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது. போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : அமைதி வேண்டும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

மீனம் : சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். உயர் கல்விக்கான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
ரேவதி : ஆசிகள் கிடைக்கும்