ங்கொப்பன் கர்நாடகாவில் பிறந்தானா? ங்கொப்பனுக்கு ங்கொப்பன் எங்க பிறந்தான்.! ரஜினிகாந்த் குறித்து பிரசன்னா அநாகரிக பேச்சு.!

0
Follow on Google News

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா பேசிய வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, அதில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து அநாகரிகமாக ஒருமையில் பேசியுள்ளது, ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது, திமுக பேச்சாளர் பிரசன்னா இது போன்று பேசுவது இது முதல் முறை கிடையாது இதற்கு முன் பல தடவை அநாகரிகமாக பேசியது திமுக தலைவர்களை கூட கோவத்தில் ஆழ்த்தியதாக செய்திகள் வெளியானது.

எதிர்மறை விமர்சனங்களால் சமூக வலைத்தளத்தில் பிரபலமான தமிழன் பிரசன்னா, தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மனம் புண்படும்படி பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார், இந்து பெண்கள் வழிபடும் மாசாணி அம்மன் குறித்து இவர் பேசியது, பாடல் ஆசிரியர் வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போது அவருக்கு ஆதரவாக பெரியாழ்வார்க்கு தான் ஆண்டாள் பிறந்தார் எனபதற்கு ஆதாரம் கேட்டு மிக அநாகரிகமாக பேசிய வீடியோ தற்போது வரை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ரஜினி குறித்து திமுக பேச்சாளர் பிரசன்னா பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்து,ரஜினி ரசிகர்களே இதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு ஏப்ரல் 6ம் தேதி தக்க பாடம் புகட்ட வேண்டும், என குறிப்பிட்டு அந்த வீடியோ வைரலாகி வருகிறது, அதில் பிரசன்னா பேசியதாவது, இந்த உலகத்திலேயே சிறந்த விஞ்ஞானி போயஸ் தோட்டத்திலே இருப்பவர்கள் எல்லாம் பைத்தியங்களும், மனநல மருத்துவமனையில் இருப்பவர்களில், இவர் இரண்டாவது உதாரணம்.

அந்த போயஸ் தோட்டத்து மனநோயாளிக்கு NCR என்றால் என்ன NRC என்றால் என்ன என்று தெரியவில்லை. அவன் NRC க்கு NCR என்கின்றான், சூப்பர் ஸ்டார் சொல்கிறான் பைத்தியக்காரன் NRC, NCR வேண்டுமா, டேய் கம்முனாட்டி NRC, NCR வந்துச்சின்னா உன் ங்கொப்பன் கர்நாடகாவில் பிறந்தானா, உங்கப்பனுக்கு கொப்பன் எங்கடா பிறந்தான் என்று சர்டிபிகேட் கேட்டால் உன்னை கொண்டு போய் சிறையில் அடைத்து விடுவான்.

நீ மராட்டியம் சென்று உன் அப்பாவின் சர்டிபிகேட் கேட்க அங்கு சென்று உங்கப்பன் சர்டிபிகேட் மட்டுமல்ல ங்கொப்பனுக்கு ங்கொப்பன் கேட்டாள் நீ எங்க போய் நிப்ப, கர்நாடகாவில் உள்ள சிறையில் உன்னை அடைத்து விடுவான் இதுதான் நடக்கப் போகிறது, நீ தமிழ்நாட்டு ஆள் கிடையாது என திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா ஒரு வருடத்துக்கு முன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.