தமிழ் மொழியை மானபங்கம் படுத்திய திமுக எம்பி செந்தில்குமார்.! இவர்களிடம் இருந்து தமிழ் காக்க படுமா.?

0
Follow on Google News

இந்தி படித்தால் தமிழ் அழிந்துவிடும், ஆகையால் இந்தியை கடுமையாக எதிர்த்து தமிழ் மொழியை திமுக தான் காப்பாற்றி வருவது போன்று, கடுமையான மொழி அரசியலை செய்து வரும் கட்சி திமுக, ஆனால் தற்போது திமுக தலைவர் முதல் தொண்டர்கள் வரை அவர்கள் பேசும் தமிழை பார்ப்பவர்கள், இனி இவர்களிடம் இருந்து தான் தமிழ் மொழி காப்பாற்றபட வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர், அந்த அளவுக்கு தமிழை மானபங்கம் செய்து வருகின்றனர் திமுகவினர்.

முத்தமிழ் அறிஞர் என திமுகவினரால் அழைக்கப்படும் கருணாநிதியின் மகனும் திமுக தலைவருமான ஸ்டாலினின் தமிழ் உச்சரிப்பு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடதக்கது, மேடைகளில் துண்டு சீட்டை பார்த்து பேசும்போது கூட தமிழை தப்பு தப்பாக உச்சரிக்கும் ஸ்டாலின், துண்டு சீட்டு இல்லாமல் தமிழில் பேசினால் தமிழ் மொழியின் நிலைமையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்கின்றனர் தமிழ் ஆர்வாலர்கள்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தான் தமிழ் வாக்கியங்களை தனது உச்சரிப்பினால் கொத்து புரோட்டா போன்று கொதருகிறார் என்றால் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தேதிகளிலும் ஸ்டாலினுக்கு தடுமாற்றம் தான், இதனை தொடர்ந்து திமுக தர்மபுரி எம்பி செந்தில்குமார் சமீபத்தில் பேசிய கட்சி நிகழ்ச்சியில் தமிழ் மொழியை மானபங்கம் படுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது மேலும் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

அவர் பேசும்போது அவர்கள் கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் அடைமொழியான கலைஞர் என்கிற வாக்கியத்தை உச்சரிக்கவே திணறினர் மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் மிக பெரிய தடுமாற்றம் அவருடைய பேச்சில் காண முடிந்தது, திமுக எம்பி செந்தில் குமார் பேச்சை ஒப்பிடும் போது திமுக தலைவர் ஸ்டாலின் மிக பெரிய பேச்சாளர் என வலைதளவாசிகள் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் திமுக எம்பி செந்தில்குமார் தனது டிவீட்டர் பக்கத்தில் தமிழில் கருத்துக்களை பதிவு செய்யும் போது பலமுறை தவறுதலாக பதிவு செய்துள்ளார், ஒருமுறை பெரியார் புகழ் ஓங்குக என்பதற்கு பதில் எட்டில் எழுத முடியாதபடி தவறுதலாக அவர் பதிவு செய்திருந்தது சமூக வலைத்தளத்தில் வைரலானது, இந்நிலையில் திமுகவினரிடம் இருந்து தான் தமிழை காப்பாற்ற வேண்டும் என்கிற சூழல் உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.