பசும்பொன் தேவரை அவமரியாதை செய்தார்களா கனிமொழி, சீமான்.? கடும் கொந்தளிப்பில் முக்குலத்தோர் சமூகம்.!

0
Follow on Google News

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என முழங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், எப்பொழுதும் நெற்றியில் திருநீர் அணிந்து காட்சி தரக்கூடியவர் தேவர் திருமகனார், அவர் வாழ்ந்த காலத்தில் இந்து மதத்தை இழிவு செய்த திராவிட கழகம், மற்றும் நாத்திகம் பேசியவர்களை அடங்கி வைத்திருந்தார் தேவர் திருமகனார், பிராமணர்களுக்கு எதிராக பூணல் அறுப்பு போராட்டத்தை ஈவேரா அறிவித்த போது, பிராமணர்களுக்கு ஆதரவாக இருந்தவர் பசும்பொன் தேவர்.

ஒரு பிராமணர் பூணல் அறுக்கப்பட்டால் ஈவேரா வென்தாடியை அருப்பேன் என பசும்பொன் தேவர் எச்சரிக்கையை தொடர்ந்து பூணல் அறுப்பு போராட்டத்தை கை விட்டார் ஈவேரா, அதே போன்று மதுரை மீனாட்சி பற்றி அவதூறாக பேசிய அண்ணாதுரையை மிக கடுமையாக எச்சரித்தவர் பசும்பொன் தேவர், அவர் வாழ்ந்த காலத்தில், நாத்திகம் பேசும்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் பசும்பொன் தேவர்.

அந்த வகையில் தெய்வீகதில் முழு ஈடுபாடு கொண்ட பசும்பொன் தேவர் அவர்கள் எப்போது நெற்றி நிறைய திருநீர் பூசி கொள்வது வழக்கமாக கொண்டவர், இந்நிலையில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அணைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் திருமகனார் நினைவிடத்துக்கு சென்றும், அவருடைய திருஉருவ படத்திற்கு மரியாதை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பசும்பொன் தேவர் திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்துகையில், தேவர் நெற்றியில் திருநீர் அகற்றப்பட்ட புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர், அதே போன்று திராவிட கொள்கைகளை கடுமையாக எதிர்த்த பசும்பொன் தேவர் அவர்களின் ஜெயந்திக்கு, திராவிடகொள்கையை பின்பற்றும் கனிமொழி தனது டிவீட்டர் பக்கத்தில் திருநீர் இல்லாத தேவர் புகைப்படத்தை பதிவு செய்து தேவர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீமான் மற்றும் கனிமொழி இருவரும் திருநீர் இல்லாத தேவர் புகைப்படத்தை வைத்துள்ளதற்கு அனைவரும் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, குறிப்பாக முக்குலத்தோர் சமூக மக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர், தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என தெரிவித்த பசும்பொன் தேவர் நெற்றியில் இருந்த விபூதியை எங்கே என கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.