உச்சகட்ட அவமானத்தில் திமுக அரசு..! வெளிச்சம் போட்டு காண்பித்த அண்ணாமலை..! திட்டமிட்டு மறைக்கப்படும் மிக பெரிய சம்பவம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

ஒரு பெரிய அவமானத்தில் தமிழக அரசு சிக்கியிருக்கின்றது, இதற்கு ஒரே காரணம் திமுக அரசின் வெட்டி விளம்பரம் தான் என்பது அம்பலமாகியுள்ளது. முல்லைபெரியாறு அணை என்பது கேரளாவின் பகுதியில் அமைந்திருக்கும் தமிழக அணை. அணை இருக்குமிடம் கேரளாவுக்கானது ஆனால் அணையும் அதன் பாசனமும் தமிழ்நாட்டுக்கானது. முல்லைபெரியாறு அணையினை இடித்துவிட்டு கேரளாவுக்கு சாதகமாக இன்னொரு இடத்தில் அணைகட்ட வேண்டும் அல்லது அணையே இல்லாமல் போகவேண்டும் என்பது கேரளாவின் திட்டம்.

இதனால் 137 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க விடாது, அணை பலமில்லை அத் உடைந்தால் கேரளா நீரில் மூழ்கும் என அடிக்கடி பயம்காட்டும். இந்நிலையில் 142 அடிவரை நீரை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிதந்தார் ஜெயலலிதா, தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறும் இந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 137 அடியில் இருக்கும்பொழுது அவர்களே அணையினை திறந்து கொண்டனர் தமிழகத்தின் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளெல்லாம் உறக்கத்தில் இருக்க தமிழகத்துக்கு நிகழ்ந்த இந்த அநீதியினை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்துக்கு இழைக்கபட்ட அநீதியினை கண்டு முதலில் கொதித்தவர் அவர்தான் ஆனாலும் தமிழக அரசு அமைதி, இதனால் “கம்யூனிஸ்டு ஆதரவோடு அடுத்த முறை துணைபிரதமராக தமிழக நலன்களை இப்பொழுது மலையாள கம்யூனிஸ்டுகளிடம் முக ஸ்டாலின் விட்டுவிட்டார்” என அண்ணாமலை மறுபடி கொதிக்க திமுகவுக்கு சிக்கலாயிற்று, அதுவரை தூக்கத்தில் இருந்த முக ஸ்டாலின் அரசு விழித்து, தமிழக நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகனை முல்லை பெரியார் அணைக்கு அனுப்பியது.

இது நிச்சயம் அண்ணாமலையின் முதல் வெற்றி, விஷயம் வில்லங்காமதை அறிந்த கேரள அரசு தமிழகத்துக்கு ஆதரவாக முல்லைபெரியாரின் அடியில் இருக்கும் பேபி அணையில் (குட்டி அணைகள்) இடைஞ்சலை கொடுக்கும் மரங்களை வெட்டி நீர்வரத்தை சரி செய்ய அனுமதி வழங்கியது. அதாவது கேரள பகுதியில் மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி வழங்கியது, இது அணையில் தமிழக உரிமையினை அங்கீகரிக்கும் செயல்

இதனை தொடர்ந்து “ஸ்டாலினுக்கு பணிந்தது கேரளம்” “சேரனை வென்றான் சோழபெருமகன்” என தமிழக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. மேலும் தமிழக முதல்வர் மரம் வெட்ட அனுமதித்த கேரள அரசுக்கு நன்றி” என தனக்கு தானே பெருமைபட்டு கொண்டார். விஷயம் கேரளாவில் கசிந்து பெரும் சிக்கலாகி இப்பொழுது மரம்வெட்ட தடை என கேரள அரசு சொல்லிவிட்டது, தமிழக அரசுக்கு பெரும் அவமானம் மறுபடியும் அவர்கள் அமைதி

அண்ணாமலை இந்த மரம் வெட்ட தடை என கேரள அரசு சொல்லி தமிழக அரசின் முகத்தில் அடித்திருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துவிட்டார் இது அவரின் இரண்டாம் வெற்றி. தமிழக அரசு தன் கன்னத்தில் விழுந்த கேரள அடியினை கண்டு கலங்கி கைவைத்து அமர்ந்துவிட்டது. அண்ணாமலை இந்த அவமானத்தில் அதாவது தமிழக நலனை கேரளா காலில் போட்டு மிதிக்கும் பொழுது தமிழக நிலை என்ன என கேள்விமேல் கேள்வி கேட்கின்றார் பதில் சொல்லுமா திமுக அரசு என்பதை மக்களின் கேள்வியும் கூட. – ஸ்டான்லி ராஜன்

அய்யா வைகோ ஆளை காணோம்…..அண்ணன் திருமா ஓடி போனார்……காங்கிரஸ் கட்சி பல்லுல சுளுக்கு…..கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவு….