தினசேவல் நியூஸ் மீது திமுக வழக்கு.! பத்திரிக்கை துறையை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராசிரியர் கண்டனம்.

0

மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் எம்.எல்.ஏ மூர்த்தி குறித்து ஜனநாயக முறையில் செய்தி வெளியிட்ட தினசேவல் நியூஸ் மீது திமுக எம்.எல்.ஏ மூர்த்தி தரப்பில் இருந்து திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த நிர்வாகி வழக்கு பதிவு செய்துள்ளார். இது பத்திரிகை சுதந்திரதுக்கு எதிரானது என்றும், வழக்குகள் மூலம் ஒரு பத்திரிகையை மிரட்டும் செயல் என பல்வேறு தலைவர்கள் தினசேவல் நியூஸ்க்கு ஆதரவாக திமுகவினர் தொடர்ந்த வழக்குக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தினசேவல் நியூஸ் மீது திமுக மாவட்ட செயலாளர் மூர்த்தி அவர்கள் தரப்பில் இருந்து அவரது வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார், தேர்தல் நேரத்தில் சூடான விமர்சனம் வருவதும் இயற்கை, இது கருத்து சுதந்திரமாக பார்க்க படுகின்ற இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், ஒரு கருத்தை எதிர்த்து மறு கருத்து என்று இல்லாமல், கருத்தை எதிர்த்து வழக்கு என்று திமுக சென்று கொண்டிருக்கிறது.

திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கை குறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, அதன் வெளிப்பாடு தான் இது. வழக்கின் மூலம் சுதந்திரமாக செயல்படும் பத்திரிகையாளர்களின் கருத்தை நெரித்துவிடலாம் என்கிற போக்கை திமுக கையாண்டு வருகிறது, இதை பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். திமுக கிழக்கு தொகுதி வேட்பாளர் மூர்த்தி அவர்கள் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர், அவரை போன்றவர்கள் இது போன்று அவதூறு வழக்குகள் பதிவு செய்து, பத்திரிகை துறையை மிரட்டுவது ஏற்று கொள்ளமுடியாத ஓன்று. இதை திமுக வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்த பேராசிரியர்.

மேலும், தினசேவல் நியூஸ் நியாமான கருத்துக்களால், நடுநிலையான கருத்துக்களால் செயல்படும் ஆன்லைன் பத்திரிகை என்று பலரால் பாராட்டை பெற்ற பத்திரிகை, உண்மையை தவற யூகித்ததை எதையும் இந்த பத்திரிகை வெளியிடுவதில்லை, அந்த பத்திரிகை மீது எந்த வழக்கு வந்தாலும் அதை உடன் இருந்து பாஜக சட்ட போராட்டம் நடத்தி இந்த அவதூறு வழக்கை நாங்கள் சந்திக்க தயார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் தனது ஆதரவை தினசேவல் நியூஸ்க்கு தெரிவித்துள்ளார்.