பாஜகவுடன் ஊடக விவாதங்களில் பங்கேற்றால் திமுக டெபாசிட் கூட வாங்க முடியாது.! பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை.!

0
Follow on Google News

பாஜக பங்குபெறும் ஊடக விவாதங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கு பெற்றால் வரும் தேர்தலில் திமுக கூட்டணி டெபாசிட் வாங்குவதே சிரமம் என திமுக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஸ்டாலினை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இனிமேல் பாஜக பங்கு பெரும் ஊடக விவாதங்களில் பங்குபெற போவதில்லை என திமுக தலைமையிலான ஊடக கண்காணிப்பு குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், திமுகவின் செல்வாக்கு மிக பெரிய சரிவை நோக்கியும், பாஜகவின் செல்வாக்கு கிடு கிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது, மேலும் கடந்த ஆறு மாதங்களில் தமிழக பாஜகவில் முக்கிய அரசியல் தலைவர், சினிமா பிரபலங்கள், சமுதாய தலைவர்கள், என இணைந்து வரும் செய்தி மக்கள் மத்தியில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,இந்நிலையில் திமுக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு ஓன்று நடத்தியுள்ளது.

அதில் பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கவும், திமுக செல்வாக்கு சரிந்து வருவதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சி விவாதம் தான் என கூறப்படுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, உடனுக்குடன் பாஜக சார்பில் பதிலளித்தது வருவது மக்கள் மத்தியில் மிக பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. மேலும் திமுகவுக்கு பதிலளிக்கும் பாஜகவினரின் ஊடக விவாதங்களின் முக்கிய தொகுப்புகள் கட் செய்து சமூக ஊடகங்களில் உலா வருவது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பாஜக பங்குபெறும் விவாத நிகழ்ச்சியில் திமுக பங்கு பெற்றால் மக்கள் மத்தியில் மிக பெரிய சரிவை சந்திக்க நேரிடும் என்றும்,இதனால் வரும் தேர்தலில் ஆர்.கே.நகர் இடைதேர்தல் போன்று டெபாசிட் வாங்குவதே கடினம் என்ற சூழல் உருவாகிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து ஸ்டாலின் உத்தரவின் பெயரில் திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் (06.11.2020) இணைய வழியில், திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பேரா.கான்ஸ்டன்டைன் தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், ஊடக விவாதங்களில் பாஜக சார்பில் பங்கேற்போர் தரம் தாழ்ந்த முறையில் கருத்துக்களைத் தெரிவிப்பதோடு, தனிநபர் தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். அவர்களால் தமிழ்த் தொலைக்காட்சி ஊடக விவாதங்களின் தரம் சரிந்து கொண்டே போகிறது. எல்லா அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் விவாதத்துக்கு அழைக்கவேண்டியது ஊடகங்களில் கடமை என்றாலும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் தனிநபர் தாக்குதல்கள் முதலானவற்றைத் தடுக்க வேண்டியதும் அவர்களுடைய கடமையே ஆகும்.

மத்தியில் பாஜக ஆட்சி இருக்கின்ற காரணத்தினாலும், அவர்களுடைய அச்சுறுத்தலின் காரணமாகவும் ஊடக நிர்வாகத்தினர் இதில் நடுநிலையோடு செயல்பட முடியாத சூழல் இருக்கிறது. எனினும் இதை இப்படியே அனுமதிப்பது தமிழகத்தின் அரசியல் சூழலைப் பாழ்படுத்தி விடும் என்று அஞ்சுகிறோம். எனவே, பாஜக பிரதிநிதிகள் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுடைய பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.