கறுப்பர் கூட்டம் பின்னால் இருக்கும் கயவர் கூட்டம்.! அருணனை வெளுத்து வாங்கிய பேராசிரியர்.! வீடியோ உள்ளே…

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பாஜக நடத்தும் வேல் யாத்திரை குறித்து நடந்த விவாத நிகழ்ச்சியில், பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் ஆகியோர் இடையே கடும் விவாதம் நடந்தது, அருணன் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் பேராசிரியர் அளித்த பதில் அடங்கிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.கந்த சஷ்டி கவசத்தை இழிவு செய்த கறுப்பர் கூட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கண்டித்தது என தெரிவித்தார் என அருணன் பேசினார்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர், கறுப்பர் கூட்டத்தை எதிர்த்து பாஜக கண்டனம் தெரிவித்து பின் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடங்கி தமிழகத்தில் ஒரு பொது கருத்து உருவான பின்னால் தான் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கண்டித்ததாக தெரிவித்த பேராசிரியர் ஒரு சிறுபான்மை சமூகம் பாதிக்கப்பட்ட உடனே கண்டனம் தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும்பாண்மை சமூகம் பாதிக்கப்பட்ட போது எந்த இடத்தில் அதை பெரியதாக பேசியுள்ளனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பாஜக நடத்தும் வேல் யாத்திரை பற்றி நன்கு அறிந்து தமிழக மக்கள் பாஜக பின்னால் இருப்பதால் தான், அருணன் போன்றார் இவ்வாறு கீலே இறங்கி பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும். மேலும் முருக பக்தி பற்றி கம்யூனிஸ்ட் கட்சி பாடம் நடத்தி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது என அருணனை வெளுத்து வாங்கிய பேராசிரியர், நீங்கள் வேண்டுமானால் மார்க்சிஸ்ட் பற்றி பாடம் எடுக்கலாம் என அறிவுரை வழங்கியவர்.

மேலும், வேல் யாத்திரை பற்றி அரசியல் ரீதியாக நீங்கள் கொச்சை படுத்த வேண்டாம் என கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணனை எச்சரித்த பேராசிரியர், கறுப்பர் கூட்டம் பின்னால் இருப்பது கயவர் கூட்டம், அந்த கயவர் கூட்டத்தை எதிர்த்து தான் நாங்கள் அரசியல் செய்கிறோம், கறுப்பர் கூட்டம் என்கிற கயவர் கூட்டம் இனி தமிழகத்தில் தொடர கூடாது என்பதற்காக தான் இந்த வேல் யாத்திரை என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.