நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்பு தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்பு, தமிழக அரசியலில் திமுக – த வெ க இரண்டு கட்ட்சிகளுக்குள் நடக்கும் அரசியலை மிக உன்னிப்பாக வேடிக்கை மட்டுமே பார்த்து வரும் டெல்லி பாஜக தலைமை, 2026 சட்டசபை தேர்தலுக்கு பின்பு தமிழக அரசியலில் எந்த ஒரு தலையிடும் செய்யாமல் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த முறை 4 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக இம்முறை வெறும் 1 சட்டபை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில்,
தமிழக பாஜகவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் டெல்லி பாஜக தலைமை வேடிக்கை பார்த்து வருவதின் பின்னனியில் குறித்த அரசியல் தற்பொழுது வெளியாகி உள்ளது. குறிப்பாக தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியை உடன் சேர்ந்து கொண்டதை மத்திய பாஜக ரசிக்கவில்லை, அதாவது தமிழகதில் செத்து போன காங்கிரஸ் கட்சியை கடந்த காலங்களில் திமுக தூக்கி சுமந்து வந்தாய் ரசிக்காத டெல்லி பாஜக.

நீங்கள் எங்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டி விட வேண்டும் என பல முறை திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் திமுக கேட்கவில்லை, இதனால் பாஜகவின் கோவத்திற்கு திமுக உள்ளானது. இந்நிலையில் தற்பொழுது காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி அமைத்து இருக்கும் நிலையில் ஆளும் தவெக அரசு திமுகவுக்கு மிக பெரிய நெருக்கடியை கொடுத்து வருகிறது.
திமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லட்ச ஒழிப்பு துறை மூலம் சோதனை செய்வது, இதில் உச்சகட்டமாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து ஒரு நாள் முழுவதும் அலைக்கழிக்க வைத்தது என் திமுகவுக்கு கடும் நெருடக்கடியை தவெக கொடுத்து வரும் நிலையில், இந்த நெருக்கடியை சமாளிக்க தற்பொழுது திமுகவுக்கு பாஜக உதவி தேவை படுகிறது.
அந்த வகையில் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – திமுக கூட்டணியை உறுதி செய்யும் விதத்தில் அரசியலில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.தொகுதி மறுசீரமை மசோதாவுக்கு கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக தற்பொழுது முதலில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முழு விவரம் வெளியில் வரட்டும் அதன் பின்பு திமுக நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிப்போம் என்கிற நிலையில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதன் பின்னணியில் திமுக – பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை மிக சுமுகமாக சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக டெல்லி தலைமைக்கும் திமுக எம்பி கனிமொழிக்கு நெருங்கிய நட்பு உண்டு, குறிப்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதின் கத்காரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் மிக நெருங்கிய நட்பில் இருக்க கூடியவர் கனிமொழி.
அந்த வகையில் கடந்த காலங்களில் திமுகவுக்கு எப்போதெல்லாம் டெல்லியில் இருந்து நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் கனிமொழி தான் டெல்லியில் பாஜக அமைச்சர்களை சந்தித்து பேசி சரி செய்வார், அந்த வகையில் தற்பொழுது தவெக அரசு திமுகவுக்கு கொடுத்து வரும் நெருக்கடி காரணமாக, தவெக வை எதிர்கொள்ள பாஜக உடன் கூட்டணிக்கு தயாராகி விட்டது திமுக என்றும்.,
அதன் வெளிப்பாடு தான் தவெக சார்பில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பான அணைத்து கட்சி கூட்டத்தை திமுக புறக்கணித்து விட்டது என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை நோக்கி நகர்கிறது திமுக என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

