வதந்தியை பரப்பி சுய இன்பம் அடையும் தர்மபுரி எம்பி..! பொய் சொன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா.?

0
Follow on Google News

சென்னை : தமிழக பிஜேபி தலைவராக முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை பதவியேற்றபின்னர் பிஜேபியை பின்தொடரும் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து வ்ருவது சமீபத்திய அண்ணாமலை கலந்துகொள்ளும் கூட்டங்களில் காணமுடிகிறது. மேலும் கடந்த இருதினங்களுக்கு முன்னர் கட்சிநிர்வாகிகள் பல மாற்றப்பட்டு புத்துணர்ச்சியூட்டப்பட்டிருக்கிறது என தொண்டர்கள் குதூகலித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்பியான திருச்சி சிவாவின் மகன் சூர்யா நேற்றுமுன்தினம் பிஜேபியில் இணைந்தார். இது திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கட்சி மூத்த நிர்வாகிகள் ரகசிய கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே பிஜேபியில் இணைந்த சூர்யா தனக்கும் தனது தந்தைக்கும் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறினார்.

மேலும் திமுகவில் எப்போதும் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை எனவும் கூறியிருந்தார். இது மேலும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து திமுக தருமபுரி எம்பியான செந்தில்குமார் சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “திமுகவில் எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஒருவர் இணைந்ததை கொண்டாடும் தமிழக பிஜேபிக்கு ஒரு தகவல்.

உங்கள் கட்சியில் உள்ள இரண்டு எம்.எல்.ஏக்கள் எங்களுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டுபேரையும் நாங்கள் தூக்கிவிடுவோம்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். எம்பி செந்தில் யாரை குறிப்பிட்டுள்ளார் என இப்போதே யூகங்கள் எழ ஆரம்பித்துள்ளது. பிஜேபியில் எம்.ஆர்.காந்தி. நயினார் நாகேந்திரன், சி.கே சரஸ்வதி மற்றும் வானதி சீனிவாசன் என நான்கு பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நயினார் நாகேந்திரன் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மறைவுக்குப்பின் பிஜேபியில் 2017 ஆம் ஆண்டில் இணைந்தார். ஆனால் தற்போது பிஜேபி தலைமையுடன் நயினாருக்கு சுமூகமான உறவு இல்லை என திமுக ஆதரவாளர்களால் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் பிஜேபி சார்ந்த எந்தவொரு கூட்டத்திலும் நயினார் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார் என்றும் திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பிஜேபி வளர்ச்சிக்கு நயினார் முக்கிய பங்காற்றியிருக்கிறார் எனவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாஜகவில் உள்ள இரண்டு எம்.எல்.ஏக்கள் எங்களுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டுபேரையும் நாங்கள் தூக்கிவிடுவோம்” என திமுக தர்மபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்த கருத்து,வதந்தியை பரப்பி சுய இன்பம் அடையும் செயல் என்றும், பொய் சொன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா பாஜகவினர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.