சினிமா துறையினர் அச்சத்தை கலைத்த தடையை உடைத்த அண்ணாமலை…கொண்டாட தொடங்கிய நச்சத்திரங்கள்..

0
Follow on Google News

2017 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு பாஜக தமிழகத்திற்கு எதிரான ஒரு கட்சி, மோடி தமிழர்களுக்கு எதிரானவர் என்கின்ற ஒரு பிம்பம் தமிழக மக்கள் மத்தியில் கட்டி அமைக்கப்பட்டது. இதே போன்ற ஒரு தோற்றம் குறிப்பிட்ட சில சினிமா துறையினராலும் கட்டி அமைக்கப்பட்டது. பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோகளின் பாஜகவை கிண்டல் செய்வது, பிரதமர் மோடியை கிண்டல் செய்வது போன்று கண்டன்டுகள் உருவாக்கப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வந்தது.

முக்கிய சினிமா பிரபலங்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பது, பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதத்தில் கருத்துக்கள் தெரிவித்து வந்தது சினிமா துறையினருக்கு மிகப்பெரிய விளம்பரத்தையும் பெற்று தந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை எதிர்த்து கருத்து தெரிவித்தால் தாங்கள் பிரபலமாகி விடுவோம் என்று சினிமாவில் மார்க்கெட்டில் இழந்த நடிகர் நடிகைகளும் கூட அதை பின்பற்றி பாஜகவுக்கு எதிராக பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வந்தனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு மற்றும் மோடி எதிர்ப்பு பிம்பம் உடைக்கப்பட்டு வருகிறது. சினிமாவில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாலோ பட வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்கின்ற ஒரு சூழல் இருந்து வந்ததால். பாஜக மற்றும் மோடிக்கு ஆதரவாக பேசக்கூடிய சினிமா துறவினர்கள் கூட அமைதியாக இருந்து வந்தனர்.

இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையுமே பாஜகவுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் செயல்படுகிறது என்கின்ற ஒரு தோற்றம் இருந்து வந்த நிலையில். பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின்பு அந்தத் தோற்றம் தற்போது உடைக்கப்பட்டு வருகிறது. பொதுவாக பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் இதற்கு முன்பு பிரதமர் மோடி புகைப்படமோ அல்லது பாஜக முக்கிய தலைவர்கள் புகைப்படத்தை திரையிட்டு அவர்கள் குறித்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்புவார்கள்.

அப்போது சினிமா துறையைச் சார்ந்தவர்கள் கேலி கிண்டலாக பதில் சொல்லி கடந்து செல்வார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை காண்பித்து அவர் குறித்த கருத்தை நக்கலாக சிரித்துக்கொண்டே நடிகர் தம்பி ராமையா விடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு தம்பி ராமையா பேசுகையில், ஒரு விஷயத்திற்காக போராடினோம் அந்த போராட்டம் ஒரு இடத்தில் முற்று பெற்று விட்டது என்று நினைத்தால் அவன் போராளி அல்ல. எதை நோக்கி நாம் நகர்ந்தோமோ அது கிடைத்தது என நினைத்து அந்த இடத்திலே இருந்து விடாமல், அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றான் சேகுவாரா.

அதைப்போன்று ஐபிஎஸ் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல அதை படித்து முடித்து வேறு ஒரு மாநிலத்தில் ஒன்பது வருட காலம் தூய்மையான ஒரு அதிகாரியாக பணியாற்றி, இன்று ஒரு கட்சியின் மாநில தலைவர் பதவியை சில மாதங்களிலே பெற்று இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணம் அண்ணாமலை இருந்து வருகிறார், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை அனுகின்ற போது உள்ளங்கையில் தரவுகளை வைத்துக்கொண்டு பதட்டமில்லாமல் பதில் சொல்கிறார் அவருக்கு நானும் ஒரு ரசிகன் என தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அண்ணாமலை குறித்து கிண்டலாக கருத்து தெரிவிப்பார் எனா நக்கலாக கேள்வி எழுப்பிய தொகுப்பாளர்களுக்கு தம்பி ராமையா பதில் முகத்தில் கரியை பூசியது போன்ற அமைந்துள்ளது. மேலும் சமீப காலமாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருவது, இதற்கு முன்பு பாஜகவுக்கு ஆதரவாக பேச அஞ்சிய சினிமா துறையினர் அச்சம் உடைக்கப்பட்டுள்ளது என்கிறது சினிமா வட்டாரங்கள்.

அண்ணாமலை வீட்டின் கதவை தட்டிய சர்வ கட்சி சரவணன்… கதவை திறந்தாரா அண்ணாமலை.?