2 கோடி வரை பேரம் பேசியும் திமுக பிரச்சாரத்துக்கு ஒப்பு கொள்ளாத நடிகை ஓவியா.! காரணம் நடிகர் வடிவேலுவா.?

0
Follow on Google News

வரும் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது, மக்களை கவர்வதற்காக சினிமா நட்சத்திரங்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர் அரசியல் கட்சிகள், இதற்கு முன் நடந்த சட்டசபை தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு சினிமா நட்சத்திரங்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார், ஆனால் தற்போது அதிமுக மற்றும் திமுகவில் சொல்லும்படியாக சினிமா பிரபலங்கள் யாரும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

ஆனால் இந்த தேர்தலில் பாஜகவில், நடிகைகள் குஷ்பு, கவுதமி, நமீதா என பட்டைய கிளப்பி வருகின்றனர், அதே போன்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் என சினிமா நட்சத்திரங்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவில் பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் இருப்பதால் இவர்களை சமாளிக்க பிக் பாஸ் புகழ் நடிகை ஓவியாவை திமுக சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த போவதாக தகவல் வெளியானது.

இதற்கு ஆரம்பத்தில் நடிகை ஓவியா ஒப்பு கொள்ளவில்லை என்றாலும் திமுக சார்பில் இரண்டு கோடி வரை பேரம் பேசப்பட்டு, 20 நாட்கள் பிரச்சாரம் செய்தால் போதும் என திமுக தரப்பில் இருந்து பேசியதும், பிரச்சாரம் செய்ய நடிகை ஓவியா ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது, அதன் தொடக்கமாக தான் கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்த போது தனது டிவீட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என ட்வீட் செய்து பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓவியா பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை ஓவியா திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக செய்திகள் பரவிய நிலையில், ஓவியாவுக்கு நெருக்கமான மூத்த சினிமா நடிகை ஒருவர் இது குறித்து ஓவியாவிடம் பேசியுள்ளார், அப்போது நகைசுவை நடிகர் வடிவேலு உச்சத்தில் இருந்தவர், 2011 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததற்கு பின்பு தமிழ் சினிமாவில் காணாமல் போய் விட்டார் கடந்த பத்து வருடங்களாக முயன்றும் அவர் சினிமாவில் இழந்த அந்த இடத்தை மீண்டும் பிடிக்க முடியவில்லை.

மேலும் நடிகர் வடிவேலுவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை உனக்கும் ஏற்பட வேண்டுமா.? என தெரிவித்துள்ளார் அந்த மூத்த நடிகை. இதன் பின்பு மற்ற நெருக்கிய சினிமா நண்பர்களிடம் ஓவியா இது குறித்து ஆலோசிக்க அனைவரும் வடிவேலுவை உதாரணம் சொல்ல, திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் முடிவை கைவிட்டதாக கூறபடுகிறது, இதன் பின்பு ஓவியாவை தொடர்பு கொண்ட திமுகவினரிடம், நான் உங்களுக்கு பிரச்சாரம் செய்தால் நடிகர் வடிவேலு போன்று காணாமல் போய் விடுவேன் என அனைவரும் கூறுவதால் எனக்கு விருப்பம் இல்லை என வெளிப்படையாக கூறிவிட்டார் ஓவியா என கூறப்படுகிறது.