ஆண், பெண்ணை லிங்க் பண்ணிவிடுபவன் கமல்ஹாசன்.! எதாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பத்தை பிரித்துவிடுவான்! ஒருமையில் விளாசிய ராதாரவி.!

0
Follow on Google News

கோவையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் ராதாரவி அங்கே போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை கடுமையாக சாட்டினார், பொதுமக்கள் மத்தியில் நடிகர் ராதா ரவி பேசியதாவது, நான் யாருக்கும் பிரச்சாரம் செய்ய தேதி கொடுக்கவில்லை, இங்கே போட்டியிடும் சகோதரி தேதி கேட்டவுடன் ஏன் கொடுத்தேன் என்றால், இந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதால் ஒப்புக்கொண்டேன்.

ஏனென்றால் என்னை விட வேறு யாருக்கும் கமல்ஹாசன் பற்றி பல விஷயங்கள் தெரியாது, இங்கே அவன் நல்லவன் போன்று இருப்பான், ஒரு உதாரணத்துக்கு சாய்பாபா காலனியில் வாடகைக்கு இருந்தவன் அங்கே வாடகை ஒழுங்கா கட்டாததால், அவனை அங்கிருந்து துரத்தி விட்டு விடுவார்கள். பின்பு வேறு ஒரு இடத்திற்கு வாடகை வீட்டில் குடியேறிய அவன், என்னைப்பற்றி சாய்பாபா காலனியில் கேட்டுப்பாருங்கள் எப்படி நேர்மையாக வாடகையை கொடுத்தேன் என்று என பேசுவார்.

ஆனால் அங்கே போய் கேட்டால் தான் இவனின் லட்சணம் தெரியும், அதுபோல் சென்னையில் சென்று கமல்ஹாசன் பற்றி கேட்டால் தான் இவனின் லட்சணம் என்னவென்று தெரியும். அவனை நம்பி வந்த மூன்று பெண்களை காப்பாற்ற முடியாத கமலஹாசன் இந்த நாட்டு மக்களை எப்படி காப்பாற்ற முடியும். அவன் உங்களை ஏமாற்றுகிறான் அவனுக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். மஹேந்திரன் இடம் இருக்கும் பணத்தை வைத்து ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறான்.

இவனும் திமுகவை தான் திட்டுகிறான் என்று அவனுக்கு ஓட்டு போட்டால், அவனுக்கு ஓட்டு போடுவது திமுக வெற்றிக்கு வழி வகுத்து விடும், அதிமுக வாக்குகளை பிரிப்பதற்காக நடக்கும் சில்மிஷம் இது, திமுகவின் கைக்கூலி கமல்ஹாசன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என மிக கடுமையாக நடிகர் கமல்ஹாசனை சாடிய நடிகர் ராதாரவி. மேலும், இவன் ஒரு குடும்பத்தை உருப்படியாக வாழ விட மாட்டான்.

ஏனென்றால் அமெரிக்கா போவான் அங்கே ஏதாவது ஒரு இழிச்சவாய் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து அந்த குடும்பத்தை பிரித்து விடுவான், பின்பு அவனுக்கு அது ஆறு மாதம் கழித்து பழசாகிவிடும், இவன் பிக் பாஸ் ஷோ நடத்துகிறார், அதில் இவனுக்கு என்ன வேலை அங்கே இருக்கும் ஆண்களையும், பெண்களையும் லிங்க் பண்ணி விடும் வேலையை தான் இவன் செய்து கொண்டிருக்கிறான் என ராதாரவி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.