அண்ணாமலைக்கு 25% வாக்குகள்… வெளியான ஷாக் ரிப்போர்ட்… கடும் பீதியில் விஜய்…

0
Follow on Google News

பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அமைப்பில் 24 மணி நேரத்தில் சுமார் 13 லட்சம் பேர் இணைந்தது ஒட்டுமொத்த இந்திய அரசியலையே அண்ணாமலையை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் பாஜகவில் இருந்து கொத்து கொத்தாக விலகி அண்ணாமலையின் புதிய அமைப்பில் பல மூத்த தலைவர்களும் தொண்டர்களும் ஒரு பக்கம் இணைந்து வந்தாலும் கூட.

திமுக அதிமுகவிலிருந்து இருந்த துடிப்பான இளைஞர்கள் பலரும் அண்ணாமலையின் புதிய அமைப்புகள் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். மேலும் சாமானிய மக்கள்கள் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அமைப்பில் எப்படி இணைய வேண்டும் என்று வழிமுறை தேடி பலரிடம் சந்தேகங்களை கேட்டு தங்களை இணைத்து வருகிறார்கள்.

இப்படி தமிழக முழுவதும் அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு மக்கள் கொடுத்து வரும் ஆதரவு இனிவரும் காலங்களில் தமிழக அரசியல் விஜய் மற்றும் அண்ணாமலைக்கு இடையிலாக தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அண்ணாமலை பாஜகவில் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்பு அதுவரை தமிழகத்தில் கட்டி அமைக்கப்பட்டு இருந்த பாஜக எதிர்ப்பு மோடி எதிர்ப்பு என்கின்ற பிம்பத்தை உடைத்தவர்.

மேலும் பாஜக பிராமணர் கட்சி என்கின்ற ஒரு பிம்பத்தையும் உடைத்து இது தமிழர்களுக்கான கட்சி என்று மக்கள் மத்தியில் பதிய வைத்தது மட்டுமல்லாமல், கடந்த 2024 இல் பாஜக தலைமையில் தனித்து கூட்டணி அமைத்து சுமார் 18 சதவீதம் வாக்குகளை அந்த கூட்டணிக்கு பெற்றுத்தந்த பெரும் பங்கு அண்ணாமலைக்கு உண்டு.

அதுவரை தமிழக மக்கள் ஒரு நல்ல தலைவனுக்கான பசியில் இருந்ததும், நாம் எதிர் பார்த்த அந்த தலைவன் அண்ணாமலை தான் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டதும் கடந்த 2024 சட்டசபை நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. இப்படி இருக்கையில் பாஜக தலைவராக அண்ணாமலை மாற்றப்பட்டதும் மக்கள் பாஜகவிற்கு கொடுத்து வந்த ஆதரவை மெல்ல மெல்ல விலகிக் கொண்டு வேறு ஒரு மாற்றுத் தலைவனை தேட ஆரம்பித்தார்கள்.

இப்படி ஒரு சூழலில் 2026 இல் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் போட்டியிட மக்கள் மாற்றத்திற்காக விஜய்க்கு வாக்களிக்க தொடங்கினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு தங்கள் வீட்டில் மகன் சொன்னான், பேரன் சொன்னான் என்று விஜய்க்கு வாக்களித்தவர்களின் நடுத்தர வயதினர் எண்ணிக்கை 10 சதவீதம் என்று கூறப்படுகிறது.

அதேபோன்று தமிழகத்தில் 18 வயதிலிருந்து 30 வயது வரை சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் உள்ள நிலையில், அதில் சுமார் 60% பேர் விஜய்க்கு வாக்களித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிகிறது, இந்த நிலையில் திமுக ஆண்ட்டி இன்கம்பன்சி மேலும் திமுக அதிமுகவுக்கு மாற்று என்று தமிழக அரசியல் களத்தில் மாற்று சக்தியாக விஜய்க்கு மக்கள் கடந்த தேர்தலில் வாக்களித்தார்கள்.

இப்படி ஒரு சூழலில் அண்ணாமலை புதிய அமைப்பு ஏற்படுத்தி விரைவில் அரசியல் களம் காண இருக்கும் நிலையில் 18 வயதிலிருந்து முப்பது வயதிற்கு உட்பட்டவர்களில் சுமார் ஒரு கோடியை 20 லட்சம் வாக்காளர்களில் 60% பேர் விஜய்க்கு வாக்களித்த நிலையில், அந்த 60% தில் சுமார் 25 சதவீததத்தை அண்ணாமலை பிரிப்பார் என்கிறது புள்ளி விவரம்.

அது மட்டுமல்லாமல் பையன் சொன்னான் பேரன் சொன்னான் என்று நடுத்தர வயதினர்கள் ஆசைக்கு ஒரு முறை விஜய்க்கு வாக்களித்தார்கள் அடுத்து யார் ஆக்கபூர்வமான தலைவன் என தேர்வு செய்யும் போது அவர்களின் தேர்வு அண்ணாமலையாக இருக்கும் என்கிறது புள்ளி விவரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here