15 கோடி ரெடியா…. உனக்கு தான் சீட்.! எ.வ. வேலு முன்னிலையில் மதுரையில் நடந்த திமுக கட்ட பஞ்சாயத்தில் முடிவு.?

0
Follow on Google News

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பில் இயங்கி வருகிறது, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் யாருக்கெல்லாம் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் என்பது குறித்து தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டதால் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் கூட்டணி தொகுதி பங்கீடுகளை உறுதி செய்து வருகிறது அதிமுக தலைமை, ஆனால் திமுக கூட்டணியில் தற்போது தான் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர், மேலும் பல தொகுதிகளில் திமுகவினற்குள் தொகுதியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் நடத்த கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வந்த திமுக முக்கிய தலைவர் எ.வ.வேலு முன்னிலையில் நடந்த கட்ட பஞ்சாயத்து மதுரை திமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி மற்றும் திமுக செயற்குழு உறுப்பினர் இள.மகிழன் இருவரும் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

திமுக தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் ஐ-பேக் நிறுவனம் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ததில், மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட தகுதியான நபராக இள-மகிழனை தேர்வு செய்துள்ளது, மேலும் மதுரை மேற்கு தொகுதியில் அதிகமான முக்குலத்தோர் சமூக வாக்குகள் இருப்பதால் அதே சமூகத்தை சேர்ந்த இள-மகிழன் போட்டியிட வாய்ப்பு வழங்கலாம், கோ.தளபதி நாயுடு சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் அவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த தொகுதியில் மிக சிறிய அளவில் தான் இருப்பதாக ஐ-பேக் நிறுவனம் திமுக தலைமையிடம் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேற்கு தொகுதியை கைப்பற்றுவதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் கோ.தளபதி சமீபத்தில் மதுரையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வந்த எ.வ.வேலுவை சந்தித்து கோ.தளபதி பேசியுள்ளார், அப்போது உடன் இருந்த மதுரை திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ, கடுமையாக கோ.தளபதியை பார்த்து உன்னுடைய மாவட்டத்தில் உன்னை மீறி எதற்கு ஒருவரை வளர விட்ட, என்னுடைய மாவட்டத்தில் யாரையாவது வளர விட்டுருக்கேனா என கடுமையாக பேசிய மூர்த்தி.

மேலும், வளர விட்டுட்டு இப்ப வந்து குத்துதே குடையதே என்றால் என்ன செய்வது, என பேசிய மூர்த்தி, உனக்கு தான் சீட் தேர்தலுக்கு செலவு செய்ய 15 கோடியை தனியா எடுத்து வச்சுக்க, நான் இது பற்றி ஏற்கனவே அண்ணனிடம் பேசிவிட்டேன் என அருகில் இருந்த எ.வ.வேலுவை குறிப்பிட்டு அண்ணன் முன்னாடி சொல்லுகிறேன் உனக்கு தான் சீட் என பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .