எடப்பாடியை விவாதத்திற்கு அழைத்து சீண்டிப் பார்க்கும் ஸ்டாலின்…

0
Follow on Google News

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்குப் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 12 வெள்ளிக்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றனர். தேர்தல் தேதிக்கு இன்னும் சில வாரங்களே மட்டுமே உள்ளதால் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திமுக, அதிமுக கூட்டணி, தொகுதிப் பங்கீட்டு, வேட்பாளர் தேர்வு என இரண்டு கட்சிகளும் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டன. இதனால் விரைவில் பிரச்சாரத்தை விரைவில் இரண்டு கட்சித் தலைவர்களும் தொடங்க இருக்கின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இந்தியா டுடே குழுமம் சார்பில் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பேசினார்.
அதில் முதல்வர் எடப்பாடியிடம் நான் விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறினார். அந்த விவாத நடத்துவதற்கு முன்பே முதல்வர் எடப்பாடி தட்சணையாக என் மீது உள்ள வழக்குகளை அவர் ரத்து செய்ய வேண்டும். பிறகு அவருடன் விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் இதை செய்து விட்டால் அவர் சொல்லும் இடத்தில் சொல்லும் நேரத்திலே விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கேட்பதை செய்துவிட்டு எடப்பாடி அவருடன் துணிச்சலாக விவாதம் நடத்துவாரா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.