சொந்த தொகுதியில் 9 ஒட்டு ஜோதிமணியின் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும்.! காங்கிரஸ் முக்கிய தலைவர் கடும் தாக்கு.!

0
Follow on Google News

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் கரூர் எம்பி ஜோதிமணி, அவர் தனது டிவீட்டர் பக்கத்தில், தமிழகம் முக்கியமான தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் காங் கட்சியில் தொகுதி வேட்பாளர் தேர்வில் கடைபிடிக்கப்படும் நேர்மையற்ற நடைமுறைகள் அதிமுக ,பிஜேபி கூட்டணிக்கே உதவும். பிஜேபி அதிமுக கூட்டணியை எதிர்த்து தலைவர் நடத்தும் யுத்தத்தை பலவீனப்படுத்தும்.இதை வேடிக்கை பார்க்க முடியாது என தெரிவித்திருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கோபன்னா இது குறித்து கூறுகையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வு பல்வேறு கட்டங்களாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றுள்ளன. தனிப்பட்ட எந்த தலைவரும் முடிவெடுக்க முடியாத நிலையில் எந்த தவறு நடக்க வாய்ப்பில்லாத ஜனநாயக நடைமுறையை கொச்சைப்படுத்துவது அப்பட்டமான கட்சி விரோத செயல் அல்லவா ?

வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக கருத்துக்களை பரப்பி நமது தலைவர்களை நாமே களங்கப்படுத்தலாமா ? 2014 மக்களவை தேர்தலில் டெபாசிட் இழந்த ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய தலைவர்களை இழிவுபடுத்தலாமா ? கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித்தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி.

ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.மேலும் சொந்த ஊரிலேயே 9 ஓட்டு வாங்கிய ஜோதிமணிக்கு 2019ல் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கியது தவறு என காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.