மாநாடு வெற்றியால் சூடு பிடிக்கும் மஹா படத்தின் விற்பனை!

0

மாநாடு படத்தின் இமாலய வெற்றி இப்போது சிம்பு படங்களுக்கான மார்க்கெட்டை விரிவுபடுத்தியுள்ளது. சிம்பு நடிக்கும் படங்கள் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாது, அதற்கான பைனான்ஸ் கிடைக்காது என பல குற்றச்சாட்டுகள் அவர் மேல் வைக்கப்பட்டு வந்தன. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இப்போது மாநாடு படம் அந்த விமர்சனங்களை ஓரம் கட்டியுள்ளது.

சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்துள்ளது. நான்கே நாளில் அனைவருக்கும் லாபம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சிம்பு கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் மஹா படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு இப்போது தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்காக இப்போது மஹா படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது.

மேலும் அந்த படத்தை பெரிய தொகைக்கு வாங்கவும் விநியோகஸ்தர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மஹா படத்தில் ஹன்சிகா மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.