தக்க பதிலடி கொடுக்காமல் எனக்கு ஓய்வு இல்லை… தோனி சபதம்.. என்னுடைய ரசிகர்கள் தலைகுனிய விடமாட்டேன்…

0
Follow on Google News

சமீபத்தில் நடந்து முடிந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, மைதானத்திலும் சமூக வலைதளத்திலும் ஆர் சி பி அணி ரசிகர்கள் செய்யும் அடாவடித்தனத்திற்கும் அளப்பறைகளுக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது.. ஏற்கனவே ஆர் சி பி அணி வீரர்கள் போட்டி முடிந்ததும் மைதானத்தில் தோனி நின்று கொண்டிருப்பதை கவனிக்காமல் நீண்ட நேரம் வெற்றியை கொண்டாடியது பெரும் பேசும் பொருளாக மாறி இருந்த நிலையில், தற்போது பெங்களூர் அணி ரசிகர்கள் சென்னை அணி ரசிகர்களிடமும் சிஎஸ்கே வீரர்கள் பேருந்து முன்பும் நின்று செய்த ரகளைகள் ஒவ்வொன்றாக வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது.

கடந்த மே 18ஆம் தேதி அன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரின் 68-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் சென்னை அணி பறிகொடுத்தது. இந்தப் போட்டியை பார்ப்பதற்காக இரண்டு அணி ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில், சென்னை அணி தோல்வி அடைந்ததும் பெங்களூரு அணி ரசிகர்கள் மைதானத்திலேயே சென்னை அணி ரசிகர்களை வெறுப்பேற்றி வம்பு இழுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மஞ்சள் நிறத்தில் இருக்கும் சென்னை அணி ரசிகர்களை தேடி தேடி கிண்டல் செய்வதும், சென்னை அணி ரசிகர்களுக்கு அருகில் சென்று ஆர் சி பி ஆர் சி பி என்று கூச்சலிடுவதும் என மைதானத்தில் ஏகப்பட்ட அடாவடித்தனங்களை செய்து இருக்கின்றனர். பெங்களூரு அணி ரசிகர்களின் ரகளை மைதானத்திற்குள் மட்டும் இல்லாமல் மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகும் தொடர்ந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அன்றைய தினம் போட்டி முடிந்ததும் தோனி உட்பட பிற சென்னை அணி வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறி தங்களுடைய பேருந்தில் ஏறிச் சென்ற போது, அங்கே நின்று இருந்த ஆர் சி பி ரசிகர்கள் பலர் சிஎஸ்கே அணி வீரர்கள் சென்ற பேருந்தைச் சுற்றி நின்று கொண்டு “RCB!!RCB!!” என்று கூச்சலிட்டு கத்தி இருக்கிறார்கள்.

மேலும் விராட் கோலியின் ரசிகர்கள் பலர் அவரது ஜெர்ஸ்ஸியை கையில் பிடித்துக் கொண்டு சிஎஸ்கே பேருந்து முன்பு காண்பித்து அலப்பறை செய்திருக்கிறார்கள். அந்த சமயத்தில், பெங்களூரு அணி ரசிகர்கள் சென்னை அணி ரசிகர்களை எப்படி எல்லாம் வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தோனி பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் இருந்து பொறுமையாக கவனித்துக் கொண்டே சென்றார்.

தோனி மட்டுமின்றி பேருந்தில் இருந்த அனைத்து சென்னை அணி வீரர்களும் பெங்களூர் அணி ரசிகர்களின் அடாவடி தனத்தை பார்த்துக் கொண்டே சென்றனர். சென்னை அணி ரசிகர்களை மட்டும் என்று சென்னை அணியும் வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொண்ட பெங்களூரு அணிவசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் என்னுடைய ரசிகர்களை தலைகுனிய விட்மேட்டேன், நிச்சயம் இதற்கு பதிலடி கொடுத்து என்னுடைய ரசிகர்களை மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் அழுத்திவிட்டு தான் ஐபிஎல் இருந்து ஓய்வு பெறுவேன் என தோனி சபதம் ஏற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்க படுகிறது.