எடப்பாடி வெஸ்ட்… ராகுல் தான் பெஸ்ட்…காங்கிரசில் இணைய இருக்கும் செல்லூர் ராஜு… காலியாகும் எடப்பாடி கூடாரம்..

0
Follow on Google News

அதிமுகவில் முன்னாள் அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு என்றால் தெரியாதவர்கள் கூட தெர்மாகோல் ராஜு என்றால் நினைவுபடுத்தி கொள்வார்கள்! அவர் தான் தற்போது திமுகவோடு கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தூண்டில் போட்டுள்ளார். கடந்த மாதம் 19-ம் தேதி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கூட இன்னும் வெளியாகாத நிலையில் அதிமுக எம்.எல்.ஏ இப்படி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்!” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விடியோவை பகிர்ந்துள்ளார். 53 வயதை கடந்தவர் இளம் தலைவரா என்ற கேள்வி ஒருபுறம் எழ, எதிர்க்கட்சி தலைவர் ஒருவரை இப்படி வம்படியாக பாராட்டுவதன் பின்னணி என்னவாக இருக்கும் என நெட்டிசன்கள் ஆராய்ச்சி செய்ய தொடங்கி விட்டார்கள்.

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு படி மேலே போய், இப்படி ட்வீட் போடுவது மூலம் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு துண்டு போடுறீங்களா என நேரடியாக செல்லூர் ராஜுவிடமே கேட்டு விட்டார், இதை கேட்பார் என சற்றும் எதிர் பார்க்காத செல்லூர் ராஜு, ராகுல் காந்தியின் தனிப்பட்ட எளிமை என்னை கவர்ந்தது என்று கூறியதோடு கூட்டணி குறித்து அடித்த தேர்தலில் முடிவு செய்வோம் என மழுப்பலாக பதில் அளித்தார் செல்லூர் ராஜு.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட அதிமுகவானது காங்கிரஸ் மற்றும் விசிகவை தன் பக்கம் இழுக்க படாத பாடு பட்டது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். திமுகவை விட காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான சீட்டு கொடுத்து தன் பக்கம் இழுப்பதே அதிமுகவின் முக்கிய திட்டமாக இருந்தது. இதே கணக்கு தான் விசிகவிற்கும், அதிமுக எங்களுக்கு 6 சீட்டு தர தாயார் என விசிக இளைஞர் அணி செயலாளர் சங்க தமிழன் வெளிப்படையாக ஊடகத்தில் பேட்டி அளித்திருந்தார், ஆனால் திமுக காங்கிரசுக்கு 10 சீட்டுகளும் விசிகவுக்கு 2 சீட்டுகளும் கொடுத்து கூட்டணியை உறுதிப்படுத்தியதால் அதிமுகவின் திட்டம் நிறைவேறாமல் போனது.

ஆனாலும் தங்கள் பாதுகாப்பு கருதி தேசிய கட்சிகளுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் அதிமுக மாஜிக்கள் உள்ளனர்.ஓர் ஆண்டு முன்பு வரை அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்து வந்தது, ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் தவறான அரசியல் நடவடிக்கையின் காரணமாக, தற்போது பாஜக தலைமையில் தனி ஒரு கூட்டணி உருவானதால் அதிமுக மேலும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் அடுத்த மாதம் ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது, ஒரு வேளை, கருது கணிப்பு முடிவுகளில் கூறியது போல், அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துவிட்டால், அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறிதான்! இதைத்தான் முன்பே கணித்து கூறியுள்ளார் அரசியல் திறனாய்வாளர் பிரசாந் கிஷோர்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டியில், இனி தமிழ்நாட்ல ஒரே ஒரு திராவிட கட்சிதான் இருக்கும் எனவும், பாஜகவுக்கு 10% மேல் தமிழ்நாட்டில் வாக்குகள் வந்துவிட்டது என்றும் கூறியிருந்தார்.NOTA உடன் தான் பாஜக தமிழ்நாட்டில் போட்டி போடும் என்ற நிலை மாறி, இன்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுகவுக்கு நேரடி போட்டியாக உருவெடுத்துள்ளது அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக.

இந்நிலையில் அதிமுக உள்ளே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுளளதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கையில், இனி எடப்பாடி தலைமையிலான அதிமுக கரை சேராது என்கிற முடிவுக்கு வந்துள்ள அதிமுக முக்கிய புள்ளிகள் பலர், தேர்தல் முடிவுக்கு பின்பு பாஜக , திமுக, காங்கிரஸ் என அதிமுகவில் இருந்து விலகி தங்களை இணைந்து கொள்ள இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், செல்லூர் ராஜு தற்பொழுது ராகுல் காந்தியை புகழந்து வருவதன் பிண்ணனியில் தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் கட்சியில் அவர் தன்னை இணைத்து கொல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான ஒருவர் மூலம் அதற்கான பேச்சுவார்த்தை கூட நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.