T20 உலக கோப்பையில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு… கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்…

0
Follow on Google News

எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு வீரரை தூக்கிவிட்டு தமிழக வீரரை சேர்க்க கேப்டன் ரோஹித் சர்மா முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 2024 ஐ பி எல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், வருகிற ஜூன் மாதம் 2024 டி20 உலக கோப்பை தொடர் தொடங்கவிருக்கிறது.

இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகிகள் இந்த போட்டிகள் நடைபெறவிருக்கும் பிட்ச்கள் குறித்த முழு தகவலையும் சேகரித்து பி சி சி ஐ தேர்வுக் குழு வாரியத்தின் தலைவர் அஜித் அகார்கரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன்படி, போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த பிட்ச்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ் நாங்கள் மட்டும் பந்துவீச்சாளர்களை மட்டுமே இந்தியா அணியில் தேர்வு செய்ய பி சி ஐ தேர்வு குழு முடிவு செய்வது. அந்த வகையில், விராட் கோலி ஸ்லோவிக்கட்டில் மிகவும் அபாரமாக ஆட கூடியவர் என்பதால் அவர் இந்த தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அண்மையில், விரைவில் தொடங்கவிருக்கும் உலகக் கோப்பை தொடரில் விளையாடவிற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் உறுதி செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. வெளியான தகவல்களின்படி, ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகிய பேட்ஸ்மேன்களின் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கே எல் ராகுலின் பெயர் இந்திய அணியின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.
2024 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் 11 பேர் கொண்ட முக்கிய வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

அதே சமயம், ஷுப்மன் கில், ரிங்கு சிங், ஆவேஷ் கான், கலீல் அகமது ஆகிய நான்கு வீரர்களும் ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.. பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்ட இந்த பட்டியல் பல்வேறு கிரிக்கெட் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் மாற்றம் செய்ய போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது நடப்பு ஐபிஎல் சீசனில் ஆவேஷ் கான் சுமாராகவே பந்து வீசியிருக்கிறார்.சொல்லப்போனால் இந்த ஐபிஎல் சீசன் இரும்பாலான போட்டிகளில் படுமோசமாக பந்து வீசி சொதப்பி இருக்கிறார். எனவே இந்திய அணிக்கான ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக நடராஜன் பெயரை சேர்க்க ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன் அபாரமாக விளையாடி அதிக விக்கெட்களை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பைக்கான, அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே, அவர்களை மாற்ற முடியும். ஆனால், ரிசர்வ் பட்டியலில் இருக்கும் வீரர்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.