வசமாக சிக்கிய யூ டியூபர் இர்பான்… 7 வருட வரை சிறை… சட்டம் கடமையை செய்யுமா.?

0
Follow on Google News

யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஹோட்டல் உணவுகளை சுட சுட ருசித்து, குளோசப் சாட்டில் ரிவிவ் செய்து, அந்த வீடியோவை யூடிப்பில் அப்லோடு செய்து பிரபலமானவர் இர்பான். ‘இர்பான் வியூஸ்’ எனும் பெயரில் இயங்கும் அவரது யூடியூப் சேனலை சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்கிறார்கள்.

உள்ளூரில் குட்டி உணவுகளில் தொடங்கி, அயல்நாடுகளில் முதலைக்கறி, மான், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் சமைத்து விற்கும் ஹோட்டல்களில் ஒருபிடி பிடித்து, மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். அதன் ஒரு படி மேலாக, திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாறே நேர்காணல்களும் எடுத்து அசத்தி வருகிறார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.

இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனது. தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் இர்ப்பான் சிறப்பாக சமைத்து வருகிறார். இதனிடையே இர்பான் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் தான் இவருடைய மனைவியின் வளைகாப்பு நடைபெற்றது. மேலும், இர்ப்பான் தன்னுடைய மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன என்பதை ஆவலுடன் தெரிந்து கொள்ள இருப்பதாக கூறி இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் தனக்கு பிறக்கு போகும் குழந்தையின் பாலினம் தொடர்பான வீடியோவை இர்பான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

துபாய்க்கு தனது மனைவியோடு சென்றிருந்த இர்பான் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து அறிவித்தார். இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்ட நிலையில் தற்போது சர்ச்சையில் இர்பான் சிக்கியுள்ளார். இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்தது. கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக அரசு விடுத்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே யூட்யூப் நிறுவனத்தின் அறிவுறுத்தலால் இர்பான் அந்த வீடியோவை தனது ‘இர்பான்ஸ் வியூ’ யூட்யூப் சேனலில் இருந்து நீக்கிவிட்டார். இந்நிலையில் தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டதற்கு சுகாதாரத்துறையிடம் இர்பான் மன்னிப்பு கோரி உள்ளார். சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வாட்ஸ் ஆப் மற்றும் தொலை பேசி மூலம் மருத்துவ விசாரணை குழுவினரிடம் இர்பான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதனிடையே, பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரம் தொடர்பாக யூடியூபர் இர்பானிடம் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்துள்ளது. இதனால் கண்டெண்டுக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணப் போகிறாரா இர்பான்? எனப் பலரும் சோசியல் மீடியாக்களில் கமெண்ட் செய்து வருகிறது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். இது 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என விதிமுறை உள்ளதால், இர்பான் விவகாரத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.