உங்கள் வீட்டில் ஏசி பயன்படுத்துகிறீர்களா.? அப்படியானால்.. லேசான மலையில் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..

0
Follow on Google News

சராசரி மனிதனுக்கு இரு சக்கர வாகனம், தொலைபேசி போன்று ஏசியும் வீட்டில் அத்தியாவசியப் பொருளாகி மாறிவருகிறது, அலுவலகங்கள், கார்கள், வீடுகள், உணவகங்கள், ஓட்டல்கள் என பல இடங்களில் ஏசி முக்கிய பங்காற்றி வருகிறது, அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஏசி அத்தியாவசிய பொருளாக மாறி வருகிறது.இனி வரும் காலத்தில் ஏசி இல்லாமல் மக்களால் வாழவே முடியாது என்ற நிலை கூட உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏசி வாங்கும் பொது, முதலில் வீட்டில் இருக்கும் அறைக்கு ஏற்ப ஏசியை வாங்கி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும். 1, 1.5, 2 டன் என பல்வேற விகிதத்தில் கிடைக்கும் ஏசிக்களை உங்கள் அறைக்கு ஏற்ப சரியானதை தேர்வு செய்ய வேண்டும். 150 சதுர அடி அறைகளுக்கு 1.5 டன் ஏசி சரியானதாக இருக்கும். அதே பெரிய ஹால் என்றால் 3 டன் வரை ஏசி பொருத்தப்படலாம்.

ஏசிக்கான உதிரிப்பாகங்களை குறைந்த விலையில் வாங்கக்கூடாது. அதேபோல் ப்யூஸ் வயர், டிரிப்பர் போன்றவற்றை ஏசிக்கு ஏற்ப தரமானதாக பொருத்த வேண்டும். டிரிப்பர் 20 ஆம்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். இதன்மூலம் மின்சாரத்தில் கோளாறு ஏற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏசியை பாதிப்பு இல்லாமல் காப்பாற்றும். ஸ்டெப்லைசர்களும் தரமான நிறுவனஙகளில் இருந்து வாங்க வேண்டும்.

ஏசியின் வெப்பநிலை எப்போதும் குறைவாக வெப்பநிலையை தேர்வு செய்தால் ஏசியின் செயல்பாடு அதிகரிக்கும். இதனால் ஏசியின் கம்பரசர், காயில், குளிரூட்டிக்கு செல்லும் வயர் என எல்லா பகுதியும் விரைவில் சூடாகிவிடும். இதன் காரணமாக தீப்பிடிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. ஏசியின் வெப்பநிலையை எக்காரணம் கொண்டும் 16 டிகிரி வரை கொண்டு செல்லக்கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

உங்களது ஏசி எந்த வகையாக இருந்தாலும் லேசான மழை பெய்யும்போது இயக்கினால் எந்த ஆபத்தும் வருவதற்கு வாய்ப்பு இல்லை, லேசான மழையில், வெளிப்புற ஏசி யூனிட்ல் குவிந்துள்ள தூசி மற்றும் அழுக்குகளும் சுத்தம் செய்யப்படும், ஆனால், கனமழை மற்றும் புயல் காலங்களில் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். மழை பெய்யும்போது ஏசியை இயக்குவது சில வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.

உதாரணமாக, ஏசி வழக்கத்தை விட வேகமாக வெப்பம் அடையலாம். அதற்கு காரணம் மழையால் உங்கள் ஏர் கண்டிஷனர் சுருள்கள் ஈரமாகிவிடும். அதை மீறி சுழன்று இயங்க வேண்டி இருக்கும். அதனால் அதிக மழை வந்தால் இயக்க வேண்டாம். அதே போல புயலின் போது ஏசியை இயக்கக்கூடாது என நிபுணர்கள் கருதுகின்றனர். புயல் என்பது ஆற்றல் விரயத்திற்கு வழிவகுக்கும். இடி அல்லது மின்னல் உங்கள் வீட்டைத் தாக்கினால், அது மின்சாரக் கம்பிகள் வழியாகச் சென்று உங்கள் ஏசி யூனிட்டை சேதப்படுத்தும்.

அதனால், முடிந்தவரை மழை, புயல், இடி இருக்கும் சமையத்தில் ஆசியை இயக்க வேண்டாம். வெயில் காலத்தில் வெப்பத்திலிருந்து மனிதனை பாதுகாத்து கொள்ள குளுமை தேவைப்படுவதைப்போல, குளிர்காலத்தில் குளிர்ச்சியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வெப்பம் தேவைப்படுகிறது.. எனவே, குளிர்காலத்தில் ஏசியை பயன்படுத்தினாலும், அவை ரிப்பேர் ஆகிவிட நிறைய வாய்ப்புள்ளது..

ஏசியிலுள்ள கம்ப்ரசர் இயங்க வேண்டுமானால், இதற்கென அடர்த்தி அதிகமுள்ள கெமிக்கல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது… இந்த எண்ணெய், குளிர்காலத்தில் உறையக்கூடியது என்பதால், ஏசியை பயன்படுத்தும்போது, ஏசியின் காயில்கள் பாதிக்கப்படலாம். இதுவே, ஹீட்டர் வசதியுள்ள ஏசிகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. எனவே, மழைக்காலத்தை போல, குளிர்காலத்திலும் ஏசியை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.