ரோகிணியின் மலேசியா மாமா இல்லை இது கறிக்கடை காரர்… கையும் களவுமாக பிடித்த சுருதி… சிறகடிக்க ஆசையில் வசமாக சிக்கிய ரோகினி

0
Follow on Google News

சுருதி ஒரு தொலைக்காட்சி தொடருக்காக டப்பிங் பேசி கொண்டிருக்கிறார், அந்த சீரியலில் சைட் ஆர்ட்டிஸ்டாக ரோகினியின் செட்டப் மாமாவாக வந்த கறிக்கடை காரர் இருப்பதை பார்த்து, இது ரோகினியின் மலேசியா மாமாவாச்சே என இவர் குறித்து முழுவிவரம் குறித்து சீரியல் இயக்குனரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார் சுருதி. உடனே ரோகினி அனைவரையும் ஏமாற்றி உள்ளார் என்பதை கண்டுபிடித்த சுருதி.

ஸ்டூடியோவில் இருந்து வீட்டிற்கு நுழையும் சுருதி அங்கிள், ஆன்ட்டி என விஜயா மற்றும் அண்ணாமலையை அழைக்கிறார். உடனே விஜயா அண்ணாமலை இருவரும் என்னமா.? ஏன் இவ்வளவு பரபரப்பா உள்ள வர்ற என கேட்கிறார்கள், அதற்கு சுருதி ரோகிணி பற்றிய ஒரு விஷயத்தை நான் கண்டுபிடித்து விட்டேன். அவர் இங்கே எல்லாரையுமே ஏமாற்றிக்கிட்டு இருக்கிறார் என சுருதி சொல்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ந்து போன விஜயாவும் அண்ணாமலையும் என்னமா சொல்ற.? என விஜயா கேட்க, பொங்கலுக்கு கிராமத்திற்கு ரோகிணியின் மாமா என்று ஒருவர் மலேசியாவில் இருந்து வந்தார் அல்லவா.? அவர் மலேசியாவே கிடையாது, சீரியல் ஆர்டிஸ்டாக சிறு சிறு வேடங்களில் நடிக்கும் ஒரு சீரியல் ஆர்ட்டிஸ் தெரிவித்தவர். இன்று ஒரு சீரியலுக்கான டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த சீரியலில் இவர் தென்பட்டார்.

உடனே நான் இது ரோகினியின் மாமாவாச்சே, என இயக்குனரிடம் இவரைப் பற்றிய முழு தகவலையும் கேட்டேன். அப்போது அவர் சிறிய வேடங்களில் நடிப்பதற்கு, அந்த சீரியலில் கமிட்டானதாக தெரிவித்த இயக்குனர். மேலும் இவர் ஒரு கறிக்கடை வைத்திருக்கிறார் என்று தெரிவித்தவர்கள். இவருக்கு சினிமா மீது மோகம் அதிகம் என்பதால் சிறு சிறு வேடங்களில் நடித்து வருவதாக சொன்னார்கள்.

இப்படி சிறு சிறு வேடங்களில் நடிக்கும் இவரைத்தான் மலேசியாவில் உள்ள மாமா என்று ரோகினி செட்டப் செய்து நம்மளை எல்லாம் ஏமாற்றி இருக்கிறார் என சுருதி, அண்ணாமலை மற்றும் விஜயாவிடம் தெரிவிக்கிறார். மேலும் அவர் கறிக்கடை வைத்திருக்கும் அந்த ஏரியாவையும் தெரிவித்து விடுகிறார் சுருதி. மேலும் ச ரோகினி நம்மளையெல்லாம் ஏமாற்றுகிறார், ஒருவேளை உண்மையிலேயே அவங்க அப்பா மலேசியால தான் இருக்கிறாரா என்று எனக்கே சந்தேகம் வருகிறது எனது சுருதி தெரிவிக்க.

அதற்கு விஜயா அவங்க அப்பா அதான் மலேசியாவில் இருந்து 15 லட்சம் அனுப்பி வைத்தாரே என்று தெரிவிக்கிறார். அதற்கு சுருதி அவருடைய அப்பா தான் இந்த பணத்தை அனுப்பினாரா.? அல்லது ரோகினி செட்டப் செய்து அவருடைய அப்பா அனுப்பியதாக நாடகமாடுகிறாரா என்று உங்களுக்கு தெரியுமா.? மேலும் ரோகிணி அப்பாட்ட இதுவரை நீங்கள் பேசி இருக்கீங்களா என சுருதி கேட்க.

அண்ணாமலையும் இதத்தான் நானும் பலமுறை உன்கிட்ட சொல்லி இருக்கேன் என்னைக்காவது நீ சுருதியோட அப்பாட்ட பேசி இருக்கியா என விஜயாவிடம் கேட்கிறார் அண்ணாமலை. மேலும் ரோகிணிக்கு என சொந்தம் என்று சொல்ல யாருமே இதுவரை வந்ததில்லை ரோகிணியின் தோழி என்று வித்யா என்கின்ற பெண் மட்டும் தான் வருகிறார் என அண்ணாமலை கேட்கிறார். உடனே விஜயா என்னை என் தலையில மொளகாரிச்சு என்னையே ஏமாற்றி இருக்கிறா ரோகினி என உச்சகட்ட கோபத்திற்கு போகிறார். இந்நிலையில் ரோகினி வசமாக சிக்கியுள்ள நிலையில் அடுத்த ரோகினி என்ன செய்யப்போகிறார் என்கிற பரபரப்புடன் சிறகடிக்க ஆசை இனி வரும் நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.