என் அடுத்த படத்தில் வடிவேலுதான் ஹீரோ… பார்த்திபன் பகிர்ந்த ரகசியம்!

0
Follow on Google News

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அடுத்து இயக்கும் படத்தில் வடிவேலுவைக் கதாநாயகனாக நடிக்க வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக கொடிகட்டி பறந்தவர் வடிவேலு. 2011 ஆம் ஆண்டு அவர் அரசியலுக்கு வந்து திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால் அவரின் சினிமா வாய்ப்புக்கு முட்டுக்கட்டை விழுந்தது.

அந்த முட்டுக்கட்டை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நீங்கவே இல்லை. இப்போதுதான் ஒரு வழியாக அவர் படங்களில் நடிக்க முடிவு செய்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்க உள்ளார். இந்நிலையில் வடிவேலுவுடன் மிகச்சிறந்த நகைச்சுவை காட்சிகளில் நடித்த பார்த்திபன் மீண்டும் வடிவேலுவுடன் இணைய உள்ளாராம்.

அந்த படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் முழு நீள காமடி படமாக அது இருக்கும் என்றும் பார்த்திபன் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.