ஒரே நேரத்தில் பத்மஸ்ரீ , பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகளை உதயநிதிக்கு வழங்க வேண்டுமாம்..

0
Follow on Google News

பத்ம ஸ்ரீ என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டு வருகிறது. பத்ம பூசண் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது.

இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று பத்ம விபூஷண் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருது ஆகும். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக உள்ள உயர்ந்த விருது பத்ம விபூசண்.

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ , பத்ம பூஷன் ,பத்ம விபூஷண் ஆகிய விருதுகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் என்று, அவரது ரசிகர் மற்றம் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட தலைமை அண்ணன் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மத்திய அரசிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு பத்மஸ்ரீ , பத்ம பூஷன் ,பத்ம விபூஷண் விருதிற்கு பதிவு செய்துள்ளதை உதயநிதி ரசிகர் உமா மகேஷ் வெளியிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான படங்களில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் தவிர்த்து மற்ற படங்கள் ஏதும் சொல்லும்படியாக இல்லை, ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் நடிகர் சந்தானம் நகைசுவை காட்சிகளுக்காக மட்டுமே வெற்றி படமாக அமைந்தது என்று விமர்சனங்கள் எழுந்தது, இந்நிலையில் சினிமா துறையில் உதயநிதி என்ன சாதித்துவிட்டார் என்பதற்காக இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ , பத்ம பூஷன் ,பத்ம விபூஷண் விருதுகள வழங்க பதிவு செய்யப்பட்டுள்ளது விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் பாரத ரத்னா விருதுக்கு அடுத்த படியான இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது சினிமா துறையில் இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது, மற்றபடி இதுவரை தமிழ் சினிமா துறையில் யாருக்கும் வழங்கப்படாத பத்ம பூஷன் விருது உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் என அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் பதிவு செய்துள்ள சம்பவம் நகைச்சுவையாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.