பீஸ்ட் அப்டேட்… காட்சிகளை முடித்து டாடா சொல்லி கிளம்பிய நடிகை!

0
Follow on Google News

நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தன்னுடையக் காட்சிகளை நடித்து முடித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் திரைப்படம் தந்த வெற்றியை அடுத்து உத்வேகத்தோடு இந்த படத்தை இயக்கி வருகிறார் நெல்சன்.

இந்த படத்தில் விஜய்யோடு பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின்ஸ் கின்ஸே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுவரை பீஸ்ட் பட ஷூட்டிங் 100 நாட்களுக்கு மேல் நடந்துள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே தான் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து படக்குழு அவருக்கு குட்பை சொல்லி விடையனுப்பி வைத்துள்ளது. முகமுடி படத்துக்கு பிறகு பூஜா ஹெக்டே தமிழில் நடிக்கும் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இந்த திரைப்படத்தைக் காண ஆவலாக உள்ளனர்.