சாதி பெருசுனு ஒரு உருட்டு..! சாதி இல்லைனு ஒரு உருட்டு..!பணம் சம்பாரிக்க அண்ணா தம்பியின் உருட்டை பாருங்க மக்களே..

0
Follow on Google News

தமிழ் சினிமாவை மாஃபியா போன்று கைப்பற்றிவிட்டது நடிகர் சிவகுமார் குடும்பம் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் கடந்த சில வருடங்களாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா அவரது தம்பி நடிகர் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் சொந்த தயாரிப்பு தான். இந்நிலையில் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான இரண்டு படங்களுக்கு முன்பு வரை சுமார் 10 படங்கள் தொடர் தோல்வியை தழுவினாலும். தொடர்ந்து அவர் படத்தில் நடிக்க தமிழ் சினிமா துறை அவர்கள் குடும்ப கட்டுப்பாட்டில் இருப்பது தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இரண்டு தரப்பினர் அவரவர் விருப்பத்துக்கு படம் எடுப்பார்கள், அதில் தற்போது போட்டி என்பது பா.ரஞ்சித் மற்றும் இயக்குனர் முத்தையா இருவருக்கும் இடையில் தான் பொது தளத்தில் விமர்சனங்கள் காரசாரமாக நடந்து வருகிறது. அதில் பா.ரஞ்சித் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவாகவும், சில சமூகத்தை சீண்டுவது போன்று கட்சி அமைத்து படம் எடுத்து புரட்சி இயக்குனர் என பெயர் பெற்றுள்ளார்.

மறு பக்கம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெருமையை திரையில் காண்பித்து அந்த சமூக பழக்க வழக்கங்களை மய்யப்படுத்தி திரைப்படம் எடுத்து வரும் இயக்குனர் முத்தையா, தனது திரைப்படத்தில் எந்த ஒரு சமூகத்தையும் சீண்டுவது போன்ற காட்சிகள் இருக்காது. இப்படி ஒருவர் சாதிக்கு எதிராக படம் எடுக்க மற்றொருவர் சாதி பெருமைகளை மய்யமாக படம் எடுத்து வருகிறார். ஆனால் இவர்கள் இருவரும் எதிர் எதிர் திசையில் பயணித்தாலும் இவர்களை அடுத்த கட்டத்துக்கு சினிமாவில் கொண்டு சென்றதில் நடிகர் காத்திக் முக்கிய பங்கு உண்டு.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியா வந்த இரண்டு படங்களில் சூரரை போற்று படத்தில் தன்னை ஒரு பெரியாரிஸ்ட் என காண்பித்து சமூக நீதி பேசிய சூர்யா, அடுத்த படமான ஜெய்பீம் படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படம் என தன்னை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க வந்த சமூகநீதி காப்பான் என காட்டி கொண்டார், அதே நேரத்தில் தற்போது அவரது சொந்த தயாரிப்பில் அவருடைய தம்பி நடிக்கும் விருமன் படத்தை விளம்பரம் செய்து வருகிறார்.

விருமன் படத்தின் இயக்குனர் முத்தையா என்பதால், அவர் இயக்கத்தில் வந்த, குட்டி புலி, கொம்பன், மருது, கொடி வீரன் தேவராட்டம் மற்றும் புலி குத்தி பாண்டியன் போன்ற படங்கள் அணைத்து ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையின் சாயலில் உள்ள படங்கள் என்பதால், முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் விருமன் படம் இதற்கு முன்பு முத்தையா இயக்கத்தில் வெளியான படம் போன்றே இருக்கும் என கருத்துக்கள் நிலவி வருமாம் நிலையில்,

சூரரை போற்று ஜெய்பீம் போன்ற படங்களில் சமூகநீதி பற்றி பேசி அண்ணன் உருட்டுவது, முத்தையா படத்தில் தம்பி இந்த பக்கம் சாதி பெருமையை உருட்டுவது என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், உழைக்கும் மக்களுக்கு எதிரா போராடனும்னு அங்குட்டு ஒரு உருட்டு…. என் ஜாதி தான் பெருசுனு இங்குட்டு ஒரு உருட்டு…. ஆக மொத்தம் இரு தரப்ப மோதவிட்டு நீங்க சம்பாதிக்கனும்.. என சூர்யா மற்றும் கார்த்திக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.