செந்தில் – ராஜலக்ஷ்மி கண்டிஷன்…. உங்க கச்சேரியே வேண்டாம் என கிராம மக்கள் கோவம்..!

0
Follow on Google News

விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் பாட்டு போட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 6இல் கிராமிய பாடல்களை பாடி பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி. இதில் செந்தில்கணேஷ், அந்த சீசனில் டைட்டல் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே இந்த தம்பதி ஏற்கனவே கோயில் கலை நிகழ்ச்சிகளில் கிராமிய பாடல்களை பாடி வந்தனர். ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தான் இவர்கள் பிரபலமாக அறியப்பட்டனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த தம்பதியினர் பங்கு பெறுவதற்கு முன்பு, அவர்களின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு குழுவாக கிராமகளில் நடக்கும் கச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டு பாடி வந்தனர், ஒரு நிகழ்ச்சிக்கு சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மொத்த அந்த குழு பெற்று வந்துள்ளனர், கிராமத்தில் நடக்கும் திருவிழா நிகழ்ச்சியில் எண்ணிக்கை இல்லாமல் அப்போது ராஜலக்ஷ்மி-செந்தில் தம்பதி இடம்பெற்ற குழுவில் கிராம பாடல்களை கச்சேரியில் பாடி வந்துள்ளது.

இந்நிலையில் இந்த தம்பதியினர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொது அதிகம் கிராமத்தில் இருந்து ஆதரவு தெரிவித்து வந்தனர், இவர்கள் இதற்கு முன் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய கிராமத்தை சேர்ந்தவர்கள் , நம்ம ஊர் திருவிழாவில் பாடியவர்கள் பெருமை அடைந்தனர், இப்படி மக்களின் அமோக ஆதரவை பெற்று கிராமிய பாடல்களை பாடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜலக்ஷ்மி – செந்தில் தம்பதியினர், இறுதியில் செந்தில் அந்த போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டர்.

இதன் பின்பு சினிமா திரைப்படங்களில் படுவதற்கு வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்ட ராஜலக்ஷ்மி – செந்தில் தம்பதியினர், வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று கிராமிய பாடல்களை பாடி வந்தனர், இந்நிலையில் மிக பிரபலமான இந்த தம்பதியினர், கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பாட அவர்களுக்குள் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து அவர்களை கச்சேரிக்கு பாட புக்கிங் செய்ய சென்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள்.

பெரும்பாலும் கிராமத்தில் நடக்கும் திருவிழா நிகழ்ச்சிகளில் பாடி வரும் இவர்கள், தற்போது ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்று பாடுவதற்கு கச்சேரி குழுவுக்கு கொடுக்கும் பணத்தை சேர்க்காமல் இவர்களுக்கு மட்டுமே தனியாக ஒரு லட்சம் வரை கேட்கின்றனர், மேலும் இருவரும் சேர்ந்து மொத்தம் 10 பாடல் மட்டும் தான் பாடுவார்கள் என கண்டிஷன் போட்டுகிறார்களாம், இருந்தும் கிராம மக்கள் ஆசை படுகிறார்கள் என்பதற்க்காக இவர்களை அழைத்து பாட வைத்து வந்துள்ளார்கள்.

மேலும் பண விஷயத்தில் கச்சேரி சென்றவர்கள் பேரம் பேசினால், வெளிநாட்டில் நடக்கும் கச்சேரியில் நாங்க வாங்கும் பணம், சினிமாவில் ஒரு பாடலுக்கு எங்களுக்கு கொடுக்கும் பணம், நாங்கள் கலந்து கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எங்களுக்கு கொடுக்கப்படும் பணம், இதெல்லாம் ஒப்பிடும் போது இது மிக குறைவு தான் என பேசி வருகின்றனர் என கூறப்படுகிறது, இவர்களின் இந்த கண்டிஷன்களை கேட்டு பலர் அப்படி ஒரு கச்சேரியே எங்களுக்கு தேவையில்லை என ஓட்டம் எடுக்கின்றார்களாம்.

இதனை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று காரணமாக கச்சேரியில் பாடவும், சினிமாவில் பாடவும் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் ராஜலக்ஷ்மி – செந்தில் தம்பதியினர், அரசியல் பிரமுகரின் திருமண நிகழ்ச்சிகளில் 50 ஆயிரம் வரை பெற்று கொண்டு பாடல் பாடி வருவதாக கூறபடுகிறது, இருந்தும் கிராமிய பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்த இந்த தம்பதியினர் கிராம மக்களிடம் பாடுவதர்க்கு காரர் கட்டுவது, அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான் என்பது போல் உள்ளது என இவர்களின் சொந்த மாவட்டம் புதுக்கோட்டையில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.