தமிழர்களை அவமானப்படுத்திய மணிரத்தினம் மனைவி.. பொன்னியின் செல்வன் எதிராக கொந்தளிக்கும் தமிழர்கள்..

0
Follow on Google News

சோழ மன்னர்களின் வரலாற்று கதையை மையமாக மிக பிரம்மாண்டமாக, அதிக பண செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், சரத்குமார் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது பொன்னியின் செல்வன்.

இந்த படம் ஒரு பேன் இந்தியா படம் என்பதால், இந்தியா முழுவதும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.பொன்னியின் செல்வன் படத்திற்கு ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லையென்றாலும்,அந்த படத்திற்காக செய்து வரும் விளம்பரங்கள் மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகள் பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதற்கு தமிழர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி உள்ளது.

இதனால் வருகிற 30-ஆம் தேதி வெளியாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிக்கெட் பெரும்பாலான திரையரங்குகளில் விற்று தீர்ந்து விட்டது. அந்த அளவுக்கு தமிழ் மன்னனின் வரலாற்று கதையை மய்யமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதற்கு உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

மேலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை திரையில் பார்ப்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நிலையில் தெலுங்கு மொழிக்கான பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிஆந்திராவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குனர் மணிரத்தினம் மனைவி சுஹாசினியின் பேச்சு ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.

ஆந்திராவில் சுஹாசினி பேசுகையில், பொன்னியின் செல்வன் படம் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எடுக்கப்பட்டுள்ளது என்று மலர்ந்த முகத்தில் மகிழ்ச்சியாகவும் , தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியில் வெறும் பத்து நாட்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது சலிப்பாக பேசிய சுஹாசினி, பொன்னியின் செல்வன் படம் உங்களுக்கான படம் என்றும், நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் பேசினார் சுகாசினி.

பொன்னியின் செல்வன் படத்தை பிற மொழியில் ஓட வைப்பதற்காக, அந்த மொழி பேசும் மக்களை கவர்வதற்காக, தமிழ்நாட்டை குறைத்து சுகாஷினி பேசியது, ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தும் செயல் என தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று ஒரு முறை ஆந்திராவில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த மொழி தெலுங்கு என நடிகர் கார்த்திக் கடந்த காலங்களில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பிற மொழிகளில் ஓட வைப்பதற்காக, அந்த மக்களை கவர்வதற்காக, தமிழனையும் தமிழ் நாட்டையும் இருட்டடிப்பு செய்வது, இது ஒட்டுமொத்த தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் என்று பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக தமிழர்கள் கொந்தளிக்க தொடங்கி உள்ளனர்.

பொன்னியின் செல்வன் படக்குழுவினர்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து ஈடுபடும் பட்சத்தில், பொன்னியின் செல்வன் வெளியாகும் நாட்களில், அந்த படத்தை புறக்கணிக்கும் வகையில் தமிழர்கள் ஈடுபடலாம் என தமிழ் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகையால் சுகாஷிணி போன்றவர்கள் கவனத்துடன் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர் தமிழ் ஆர்வாளர்கள்.