பயில்வானை செருப்பை கழட்டி அடித்த நடிகை… முக்கிய பிரபலம் வெளியிட்ட பரபரப்பு.. யார் அந்த நடிகை தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சினிமா பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், தொடர்ந்து சினிமாவில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை பேசி வருகின்றவர். நடிகர் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளையும் உருவாக்கி வரக்கூடியவர் பயில்வான், அந்த வகையில் நடிகை ராதிகா தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பயில்வான் திருவான்மியூர் பீச்சில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது.

அங்கு வந்த நடிகை ராதிகா சரமாரியாக அசிங்க அசிங்கமாக பயில்வானை திட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நடிகை ரேகா நாயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், வழக்கம் போல் திருவான்மியூர் பீச்சில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பயில்வானை வழிமறித்து சண்டையிட்டார் ரேகா நாயர்.

இதுபோன்று தனக்கு எதிராக பல எதிர்ப்புகள் வந்தாலும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார் பயில்வான். இந்நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் தற்பொழுது பயில்வான் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், பணம் கிடைக்கிறது, சாப்பாடு கிடைக்கிறது என்பதற்காக கண்டபடி பேசலாமா.? உன் மனைவி பெண். உன் தாய் பெண், நீ பெற்றதும் ஒரு பெண் தான்.

உன் வீட்டுப் பெண்களை நினைத்து, அடுத்த வீட்டுப் பெண்களை கேவலப்படுத்தாமல் இருக்க வேண்டும். நடிகை சகோதரி மீனா, அவருடைய கணவர் எப்படி இறந்தார்.? எங்கே இறந்ததற்கு மருத்துவ சான்றிதழ்.? கேவலமானவனே….யாருடா நீ.? மெடிக்கல் சர்டிபிகேட் கேட்க.? ஐசரி கணேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் மீனா கணவர் இறந்ததற்கு, மீனா வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றுள்ளார்கள்.

அப்போது நடிகை மீனா மற்றும் அவரது குழந்தை இருவரும் கதறி கதறி அழுதுள்ளார்கள். அப்படி சோகத்தில் இருப்பவர்களை பற்றி கேவலமாக பேசுவது, என்னடா பொழப்பு.? சகோதரி ராதிகாவுக்கு பின்பு மற்றொரு சகோதரி ரேகா நாயர் திருவான்மியூர் பீச்சில் அவரை மடக்கி பேசியதை நான் வீடியோவில் பார்த்தேன் அந்த சகோதரிக்கு பாராட்டுக்கள்.

என்னுடைய சகோதரி சரத்குமார் மனைவி ராதிகா அவர்கள் திருவான்மியூர் பீச்சில் காலில் இருப்பதை கழட்டிய அடித்தார், அப்போதாவது உனக்கு புத்தி வர வேண்டாமா.? என கே. ராஜன் பேசியுள்ளது, இதற்கு முன்பு திருவான்மியூர் பீச்சில் பயில்வான் – ராதிகா இடையே நடந்த சண்டையில் ராதிகா காலில் இருந்த செருப்பை கழட்டி அடித்தாரா அல்லது கே. ராஜன் பொய் சொல்கிறாரா, என்பதை பயில்வான் ரங்கநாதன் விளக்கம் கொடுக்க வேண்டும் என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளாட்பாரம் டூ சினிமா பைனான்சியர்… எப்படி வந்தது இத்தனை கோடி.? யார் இந்த அன்பு செழியன்.?

error: Content is protected !!