நடிகை அதிதி சங்கர் வைத்த ஆப்பு… தேம்பி தேம்பி அழுத ராஜலக்ஷ்மி.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமிய பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர், புதுக்கோட்டை மற்றும் அது அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் நடக்கும் கச்சேரிகளில் கிராமிய பாடல்களை பாடி அவர்களின் வாழ்க்கையை நடத்தி வந்தனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த தம்பதியினர்.

அந்த நிகழ்ச்சியில் இவர்களுக்கு கொடுத்த பில்டப்பில் பிரபலமானார்கள். பல திறமை மிக்க போட்டியாளர்கள் இவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங்காகவே செந்தில் அந்த சீசனில் வெற்றியாளராக இறுதி போட்டி வரை அழைத்து செல்லப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் என்கின்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பின்பு செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியினர் வெளிநாடுகளில் நடக்கும் கச்சேரிகள் மற்றும் சினிமாவில் பாடல் படும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் பாட்டு பாட சம்பளத்தை பல மடங்கு ஏற்றி கொண்டனர் செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியினர், மேலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் கூடுதலாக ஒரு பாடல் கூட பட மாட்டோம் என்கிற கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.

தங்களை கிராமிய பாடகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு உயரத்துக்கு வந்த பின்பு பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்க ரெம்ப பிசி என்று கிராமத்தில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளை அலட்சியப்படுத்துவதாக இந்த தம்பதியினர் மீது குற்றச்சாட்டும் எழுந்தது. செந்தில் – ராஜலட்சுமி இருவரும் பல சினிமாக்களில் பாடல் பாட வாய்ப்பு கிடைத்தாலும் பெரிதாக ஜொலிக்கவில்லை.

இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் மற்றும் புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடல் இந்த இரண்டு பாடல் தவிர்த்து மற்ற எந்த பாடலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்பொழுது திரைக்கு வர இருக்கும் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள மதுரை வீரன் என்கிற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த பாடலை பாடிய நடிகை அதிதி சங்கருக்கு பாராட்டு குவிய தொடங்கியுள்ளது.

முதலில் இந்த பாடலை ராஜலட்சுமி குரலில் தான் ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ராஜலட்சுமி குரலில் இந்தப் பாடலை கேட்கும் போது கீச் கீச் என்று கத்துவது போன்றும், அதை கேட்கும் பொழுது எரிச்சலை ஏற்படுத்துவது போன்று உணர்ந்துள்ளார்கள் படக்குழுவினர் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் என கூறப்படுகிறது. இதன் பின்பு அந்த படத்தின் நடிகை அதிதி சங்கரை இந்த பாடலை பாட வைத்து ரெக்கார்டிங் செய்த போது மிகப் பிரம்மாண்டமாக இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து ராஜலட்சுமி குரலில் ரெக்கார்ட் செய்யப்பட்டதை நீக்கிவிட்டு, அதிதி சங்கரின் குரலில் மதுரை வீரன் பாடல் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல இசையமைப்பாளர்கள் பரவாயில்லையே, கிராமத்து பாடலை ராஜலட்சுமியை விட அழகாக பாடுகிறார் அதிதி சங்கர் என வியர்த்து பார்த்து, அடுத்து ராஜா லக்ஷ்மியை வைத்து ரெகார்ட் செய்வதற்கு பதில் அதிதி சங்கருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்கிற முடிவில் பலர் உள்ளனர்.

இந்நிலையில் நடிகையாக அறிமுகமாகி உள்ள அதிதி சங்கர் பாடகராகவும் ஒரு ரவுண்டு தமிழ் சினிமாவில் வலம் வருவார் என கூறப்படும் நிலையில், ராஜலக்ஷ்மிக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகள் அதிதிக்கு செல்லும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் மதுரை வீரன் பாடலில் தன்னுடைய குரல் நீக்கப்பட்ட விஷயம் ஆடியோ வெளியீட்டின் கடைசி நேரத்தில் தான் ராஜலட்சுமிக்கு தெரியவந்துள்ளது என்றும் , இதை அறிந்த ராஜலட்சுமி மிகுந்த ஏமாற்றத்துடன் கணவரிடம் தேம்பி தேம்பி அழுததாக கூறப்படுகிறது.

பிளாட்பாரம் டூ சினிமா பைனான்சியர்… எப்படி வந்தது இத்தனை கோடி.? யார் இந்த அன்பு செழியன்.?